Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டிசம்பர் 18, 2018 அன்று பிரதமர் மகாராஷ்டிராவுக்கு பயணம்


டிசம்பர் 18, 2018 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மும்பையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ள “ரிபப்ளிக்” மாநாட்டில் அவர் உரையாற்றுவார்.

பிறகு ஆளுநர் மாளிகையில் பிரபல கேலிச்சித்திரக் கலைஞர் ஆர் கே லஷ்மணை மையமாகக் கொண்ட “டைம்லெஸ் லஷ்மண்” என்ற தலைப்பிலான புத்தகத்தை பிரதமர் வெளியிடவுள்ளார்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற போக்குவரத்து குறித்த முக்கிய திட்டங்களை பிரதமர் துவக்கி வைக்கவுள்ளார்.

கல்யாணில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் இரண்டு முக்கிய மெட்ரோ தாழ்வாரங்களான தானே-பிவாண்டி-கல்யாண் மெட்ரோ மற்றும் தஹிசர்-மீரா-பயந்தர் மெட்ரோவுக்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டுவார். இந்த இரண்டு தாழ்வாரங்கள் முடிவடைந்த பின், இந்தப் பகுதியில் பொது போக்குவரத்து பெரிய அளவில் மேம்படுத்தப்படும்.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் (EWS) மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர்களுக்குமான (LIG) 90,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தை பிரதமர் துவக்கி வைப்பார். பிறகு அவர் மக்களிடையே உரையாற்றுவார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு புனே செல்லும் பிரதமர், புனே மெட்ரோ மூன்றாவது கட்டப் பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி மக்களிடையே உரையாற்றுவார்.

***

விகீ/அரவி/வேணி