பி.எம்.இந்தியா
அகில இந்திய வானொலி நிலையம் உருவாக்கிய ராம்சரிதமானசின் டிஜிட்டல் முறையிலான குறுந்தகடுகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
இசையின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த குறுந்தகடுகளைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி இவற்றை உருவாக்கிய கலைஞர்களின் முயற்சிகளை பாராட்டினார். இது இசைக்கு அளிக்கப்பட்ட பெருமை மட்டுமல்லாமல் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கும் பெருமை சேர்க்கிறது என்று அவர் அப்போது கூறினார்.
ராம்சரிதமானஸ் மாபெரும் காப்பியம் என்று குறிப்பிட்ட பிரதமர் இது இந்தியாவின் பெருமையை விளக்குகிறது என்று கூறினார். உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொண்டார்கள் என்றும் அவர்கள் வழித்தோன்றல்கள் ராம்சரிதமானஸ் மூலம் இந்தியாவுடனான தங்கள் பிணைப்பை தொடர்ந்து தக்க வைத்தனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, தகவல்களை அளித்து மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அகில இந்திய வானொலியின் பங்கை அவர் பாராட்டினார். அகில இந்திய வானொலி பல்வேறு கலைஞர்களின் படைப்புகளை சுமார் 9 லட்சம் மணித்துளிகள் அளவிற்கு ஏராளமான ஒலி நாடா வடிவில் கொண்டுள்ளது என்ற தகவல் தனக்கு தரப்பட்டதாக பிரதமர் அப்போது தெரிவித்தார். இவை விலை மதிப்பற்றவை என்று குறிப்பிட்ட பிரதமர் இந்த திரட்டுக்களை ஆவணமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் திரு. அருண் ஜேட்லி மற்றும் பிரசார் பாரதியின் தலைவர் திரு. சூரியபிரகாஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
PM @narendramodi launches digitised version of the Ram Charitmanas in New Delhi.
— PMO India (@PMOIndia) August 31, 2015
The strength of Akashvaniis immense and I fully understand it: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 31, 2015
I remember learning about the PokhranTests of 1998 through a tea seller in Himachal Pradesh, who heard it on the radio: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 31, 2015
The tea seller heard it on the radio and he told me very happily, "Ataljihas tested the bomb" : PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 31, 2015
This digital version will help people across the world: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 31, 2015
The digital version of Ramcharitmanasreleased today will further popularise the great epic across the world. http://t.co/4EVWalb1t5
— NarendraModi(@narendramodi) August 31, 2015
For 22 years continuously, Ramcharitmanashas been broadcast on @AkashvaniAIR. This is an extremely commendable feat.
— NarendraModi(@narendramodi) August 31, 2015
I congratulate the entire @airnewsalerts team for their efforts in compiling all Ramcharitmanasbroadcasts in the form of the CDs.
— NarendraModi(@narendramodi) August 31, 2015