Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தகவல் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்தியாவிற்கும் கத்தார் நாட்டிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தகவல் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்தியாவிற்கும் கத்தார் நாட்டிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2015 மார்ச் மாதம் கையெழுத்தானது. இது 2016 ஜனவரி முதல் தேதியும் 2016 ஜனவரி 12ம் தேதியும் முறையே இந்தியா மற்றும் கத்தார் அரசுகளால் ஏற்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தினால் தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் இரு நாடுகளின் தனியார் நிறுவனங்கள், திறன் வளர்ப்பு நிறுவனங்கள், அரசுகள் மற்றும் பொதுத்துறை அமைப்புகளிடையே தீவிர ஒத்துழைப்பு ஏற்படும்.