Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-பாலஸ்தீனம் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அமைச்சரவைக்கு எடுத்துரைப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு, எடுத்துரைக்கப்பட்டது.

மின் ஆளுமை, மொபைல் ஆளுமை, மின்னணு முறையில் பொதுமக்களுக்கு சேவை வழங்குதல், இணையதள பாதுகாப்பு, மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள், புதிய நிறுவனங்களை தொடங்குவதற்கான கூட்டமைப்பை ஏற்படுத்துதல் (start-ups ecosystem) ஆகிய துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், இந்த புரிந்துணர்வு உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு உடன்பாடு, நாடுகள் கையெழுத்திடும் தேதியில் அமலுக்கு வரும். தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். இரு நாடுகளின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கிய பணிக்குழுவை ஏற்படுத்தி, இந்த உடன்பாடு அமல்படுத்தப்படும். தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) இருதரப்பு ஒத்துழைப்பில் வர்த்தர்களுக்கு இடையேயான தொடர்பும்(B2B), அரசுகளுக்கு இடையேயான தொடர்பும் (G2G) வலுப்படுத்தப்படும். வர்த்தகர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளால், வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு ஏற்படும்.

பின்னணி:

சர்வதேச அளவிலும், இருதரப்பு அளவிலும், பாலஸ்தீனத்தின் நலனுக்கு இந்தியா வலுவான முறையில் அரசியல் ஆதரவு அளித்து வருகிறது. பாலஸ்தீனிய மக்களுக்கு பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்பாட்டை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள், நவம்பர் 2016-ல் நடைபெற்ற இருதரப்பு கூட்டு ஆணைய கூட்டத்தின் முதல் அமர்வில் தொடங்கப்பட்டன. தீவிரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, புரிந்துணர்வு உடன்பாட்டின் வரைவு இறுதிசெய்யப்பட்டது. பாலஸ்தீனத்திலிருந்து முக்கிய விஐபி-க்கள் மே 2017-ல் இந்தியாவுக்கு வந்தபோது புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்தானது.