Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தன்பாத் மற்றும் பத்ராத்துவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

தன்பாத் மற்றும் பத்ராத்துவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

தன்பாத் மற்றும் பத்ராத்துவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

தன்பாத் மற்றும் பத்ராத்துவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


ஜார்க்கண்ட் ஆளுநர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களேமக்கள் முதலமைச்சர் திரு. ரகுபர் தாஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான திரு. ஆர்.கே.சிங், திரு.அஸ்வினி, சுதர்சன் பகத் அவர்களே, ஜார்க்கண்ட் அமைச்சர் திரு. அமர்குமார் ராமச்சந்திரா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பிரேம் சிங், சட்டமன்ற உறுப்பினர் திரு. ஃபுல்சந்த் மற்றும் இங்கே பெருந்திரளாக கூடியிருக்கிற எனதருமை சகோதர, சகோதரிகளே

அனைத்துக்கும் முதலாவதாக தீரம் மிக்க பகவான் பிர்சா முண்டாவை நான் வணங்குகிறேன். இது தியாகத்தின் பூமியாகும். இது ஜெய்ப்பால் சிங், திரு. முண்டா ஆகியோரின் போராட்ட பூமியாகும். மேலும் இது அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் கனவு பூமியாகும். இதன் கரிம வளங்கள் நாட்டின் வளர்ச்சிக்கான எந்திரங்கள் போன்றவை.

நீங்கள் கடந்த இரண்டு, மூன்று மணி நேரமாக காத்திருக்கிறீர்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது. நீங்கள் எங்களை அன்போடு வரவேற்று எங்கள் மீது வாழ்த்துக்களைப் பொழிந்திருக்கிறீர்கள். உங்களின் மகத்தான அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் உண்மையிலேயே நான் நன்றியுடையவன் ஆவேன். தேர்தல் நேரத்தில் நான் ஜார்க்கண்டுக்கு வந்திருந்த போது இரண்டு என்ஜின்கள் பற்றி கூறியிருந்தேன். ஜார்க்கண்டின் வளர்ச்சிக்கு தேவையான என்ஜின்களில் ஒன்று ஜார்க்கண்ட் அரசு அமைவது மற்றொன்று தில்லியில் மத்திய அரசு அமைவதாகும். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இலக்குகளுடன் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசும், ஜார்க்கண்ட் அரசும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளை நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதன் பயன்கள் உங்கள் முன்னால் உள்ளன. ஜார்க்கண்ட் மக்கள் அதனை மிக நன்றாக அனுபவித்திருக்கிறார்கள்.

நமது செயற்பாட்டு முறையில் விருப்பங்களும் சரியா, இல்லையா என்பதையும் மக்கள் நலனுக்காக பணியாற்றுகிறோமா இல்லையா என்பதையும் ஜனநாயக நாட்டில் முடிவு செய்வது ஒரேயொரு அம்சம்தான். அது மக்களின் ஒப்புதலாகும். ஜார்க்கண்ட் அரசையும், முதலமைச்சர் ரகுபர் தாஸ் அவர்களையும் அவரது ஒட்டுமொத்தக் குழுவையும் நான் பாராட்டுகிறேன். சிறிது காலத்திற்கு முன்னதாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் ஜார்க்கண்ட் அரசாலும், மத்திய அரசாலும் செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு மக்களின் முழு ஆதரவு இருக்கிறது என்பதை காட்டுகின்றன.

சகோதர சகோதரிகளே

2014 தேர்தல்  காலத்தில் நான் இங்கே வந்தபோது ஜார்க்கண்ட் மக்களால் என் மீது பொழியப்பட்ட அன்பினை வட்டியோடு திருப்பித் தருவேன் என்று நான் சொல்லியிருந்தேன். வளர்ச்சியோடு அதனை நான் திருப்பித் தருவேன். மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஜார்க்கண்ட்டின் மேம்பாட்டிற்கு அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன. தலித் மக்கள், ஒடுக்கப்பட்டோர், சுரண்டப்பட்டோர், வறுமையுற்றோர், பழங்குடியின சகோதர சகோதரிகள், பெண்கள், இ.ளைஞர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக விரிவானத் திட்டங்களை நாம் கொண்டிருக்கிறோம்.

இன்று சுமார் 27,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த 27,000 கோடி ரூபாய் என்பது மாநில அரசின் பட்ஜெட் தொகையை விடக் கூடுதலாகும். சிந்த்ரியில் தொழிற்சாலை, பத்ராத்துவில் மின் திட்டம், தியோகர் எனப்படும் பாபா போல்நாத் அல்லது சிவா நகரில் விமான நிலையம், எய்ம்ஸ் மற்றும் ராஞ்சியில் குழாய்ப் பாதைகள் என 27,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 50-க்கும் அதிகமான திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது ஜார்க்கண்ட் எவ்வளவு முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் அடைந்து வருகிறது என்பதை நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்.

ஜார்க்கண்ட் மக்கள் வைரங்களை உடைமையாகக் கொண்டவர்கள் என்று நான் எப்போதுமே சொல்லி வருகிறேன். நிலக்கரி என்பது கருப்பு வைரம் போல் இருக்கிறது. இது கருப்பாக இருந்தாலும் ஒரு பகுதியை ஒளிமயமாக்கும் திறன் கொண்டது. இதற்கு ஒளியை உண்டாக்கும் திறனும், எரிசக்தி உற்பத்தித் திறனும் உள்ளது. இதனை மனதில் கொண்டு 18,000 கோடி ரூபாய்க்கு மேலான முதலீட்டுடன் பத்ராத்துவில் மின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நிலக்கரி என்பது ஜார்க்கண்டுக்கு பொருளாதார வளத்தை மட்டும் வழங்கவில்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அது வழங்குகிறது. பத்ராத்துவில் தொடங்கப்படும் மின் திட்டத்தின் உதவியுடன் வளர்ச்சிக்கான புதிய பாதைகள் திறக்கப்படும். இந்தத் திட்டத்திற்காக இடம் பெயர்க்கப்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெறும் என்றும் அந்த குடும்பங்கள் கவனித்துக் கொள்ளப்படும் என்று நாங்கள் உறுதி அளிக்கிறோம்.

இளைஞர்கள் சிலருக்கு வேலைக்கான அட்டைகள் வழங்கும் வாய்ப்பை நான் பெற்றிருப்பதற்காக இன்று நான் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பல வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வழங்குவது நமது கனவாக இருந்தது. 2014-ல் நான் பொறுப்பேற்றபோது சுமார் 18,000 கிராமங்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக இருட்டிலேயே வைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு மின்சாரம் எளிதாக கிடைக்கவில்லை. அவர்கள் மின்கம்பங்களையோ, மின்மாற்றித் தடங்களையோ அவர்கள் கண்டதில்லை. இந்த கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவது என்ற கடுமையான பணியை நாம் மேற்கொண்டோம். இவை விரைவில் அணுக முடியாத, தொலைதூர புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாகும். வாக்கு வங்கி அரசியலில் மூழ்கியிருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்ட இந்த மக்களைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை. அவர்களுடைய கவலையெல்லாம் வாக்கு வங்கி மட்டும்தான். இருப்பினும் “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற மந்திரத்தை நாம் பின்பற்றுகிறோம். எனவே இந்த 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்குவது நமது நோக்கமாக இருக்கிறது. ஒரு இடம் மிகவும் தொலைதூரத்தில் இருந்தாலும் நாட்டில் அணுக முடியாத ஒரு பகுதியானாலும் மலை சிகரங்களாக இருந்தாலும், அடர்ந்த காடுகளாக இருந்தாலும் நாம் மின்சாரம் வழங்குவோம். இத்தகைய இடங்களில் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வதற்கு லட்சக்கணக்கான ரூபாயை செலவிட நாம் தயாராக இருக்கிறோம்.

குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே இந்த 18,000 கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு விடும் என்பதைக் கூற நான் மகிழ்ச்சியடைகிறேன். நாடு சுதந்திரமடைந்து 50-60 ஆண்டுகள் ஆன பிறகும் கூட மின்சாரம் வழங்கப்படாத இந்த கிராமங்கள் பற்றி ஒருவரும் விசாரிக்கக் கூட இல்லை. இந்த 18,000 கிராமங்களுக்கு வர முன்பு நேரமில்லாதவர்கள் இப்போது இவற்றுக்கு வந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதற்கு நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். இதைத் தொடர்ந்து அதிகாரிகளும் கூட எல்லா நேரங்களிலும் விழிப்போடு உள்ளனர். நிர்ப்பந்தத்தின் கீழ் அவர்கள் பொறுப்புடன் பணியாற்றி வருகிறார்கள். ஒரு அறிவிப்பின் மூலம் பணிகள் தொடங்கும் போது நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. மின் கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் கொண்டு செல்லும் தடங்கள் அமைக்கப்பட்டு 5-25 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டாலும் வேலை நடக்கிறதா என்று கேட்டு நாட்டை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்களின் கேள்வி மிகவும் முக்கியமானது.

70 ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னரும் 4 கோடி மக்கள் அல்லது 20 சதவீத வீடுகள் மின்சாரம் கொண்டு செல்லும் தடங்களையோ, மின்சாரத்தையோ பெற்றிருக்கவில்லை என்பதை இத்தகைய கேள்விகளை எழுப்புகின்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த குடும்பங்கள் ஒருபோதும் விளக்கைப் பார்த்ததில்லை. ஏற்கனவே மின்சாரம் வழங்கப்பட்ட வீடுகளின் மின் இணைப்பை மோடி துண்டித்து விடவில்லை. 60 ஆண்டுகளாக இந்த மக்களின் வாழ்க்கையை இருளில் வைத்திருந்த இவர்களைத்தான் குறைக் கூற வேண்டும். ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் இந்த 18,000 கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்குவதற்கு நாம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறோம். சௌபாக்யா திட்டத்தின் கீழ் 4 கோடி குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். இந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஏழைகளிடம் அனுதாபம் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கு பணக்காரர்களைக் குறை கூறுகின்றவர்கள் மோடி பணக்காரர்களுக்காகப் பணி செய்கிறார் என்று திரும்பத் திரும்ப கூறுகிறார்கள். இதுவொரு மனோபாவமாக மாறியிருக்கிறது. மின் இணைப்புகள் வழங்கப்படவிருக்கின்ற 18,000 கிராமங்களில் சமூகத்தின் எந்தப் பணக்காரப் பிரிவினர் குடியிருக்கிறார்கள் என்று அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். மின் இணைப்புத் தருவதற்கு மோடி விரும்புகிற, இன்னமும் இருளாக இருக்கிற 4 கோடி வீடுகளில் குடியிருப்போரில் யார் பணக்காரர்கள்? தொழிலாளர்களின் துயரங்கள் பற்றி லேசான சிந்தனைக் கூட இல்லாத அவர்களிடம் இதை நான் கேட்க விரும்புகிறேன். எனவே சகோதர சகோதரிகளே, சமூகத்தின் மிகவும் அடித்தளத்தில் இருக்கின்ற தலித் மக்கள் சுரண்டப்பட்டோர், வறுமையில் வாழ்வோர் ஆகியோரை வளர்ச்சிப் பயணத்தில் நினைத்துக் கொள்ள விரும்புகிறோம் என்பதை அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 4 கோடி குடும்பங்களில் 32 லட்சம் ஜார்க்கண்டை சேர்ந்தவை. இந்த 32 லட்சம் குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பொறுப்பினை மத்திய அரசோடு முதலமைச்சரும் ஏற்றுக் கொண்டிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முன்முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.

சகோதர சகோதரிகளே

சிந்த்ரியில் யூரியா தொழிற்சாலையை இன்று மீண்டும் தொடங்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். ஏறத்தாழ 16 ஆண்டு காலம் இந்தத் தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தொழிற்சாலை பாரதீய ஜனசங்கத்திலிருந்து டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி, மத்திய அரசில் அமைச்சராக இருந்த காலத்தைச் சேர்ந்ததாகும். சிந்த்ரியில் யூரியா தொழிற்சாலைக்கு அவர் அடிக்கல் நாட்டியிருந்தார். பின்னர் இது மூடப்பட்டது. 2014 தேர்தலின் போது சிந்த்ரியில் இந்த தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படும் என்று நான் உங்களிடம் கூறியிருந்தேன்.

சகோதர சகோதரிகளே,

காலத்திற்கேற்ப தொழில்நுட்பம் மாற்றம் அடைய வேண்டும். எரிவாயுவை எரிசக்தி வளமாக பயன்படுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த தொழிற்சாலை வெகு விரைவில் தொடங்கப்படும். இதே போன்ற ஒரு தொழிற்சாலை கிழக்கு உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் தொடங்கப்படும்.

சகோதர சகோதரிகளே,

சிந்த்ரியையும், தான்பாதையும் நிலையான நகரின் துருவங்களைப் போல் பிரிக்க முடியும். இங்கு ஏராளமான வளங்கள் இருக்கின்றன. சகோதர, சகோதரிகளே, யூரியா தொழிற்சாலைகள் எரிவாயுவை எளிதாகப் பெறலாம். பீகாரில் உள்ள பரோனி, கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர், ஜார்க்கண்டில் உள்ள சிந்த்ரி ஆகிய இடங்களில் அமையும் 3 தொழிற்சாலைகள் இந்தியாவில் கிழக்குப் பகுதிக்கு யூரியாவைக் கொண்டு செல்லும் போக்குவரத்து செலவைக் குறைக்க உதவும். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். யூரியா எளிதாக கிடைப்பது கிழக்கு இந்தியாவில் நாட்டின் 2-வது பசுமைப் புரட்சிக்கு உதவும். இந்த நோக்கத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம்.

வேம்பு கலந்த யூரியா உற்பத்தியை நாம் தொடங்கியிருக்கிறோம். ஏற்கனவே விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. விவசாய நிலங்களுக்கு யூரியா சென்று சேரவில்லை. அது தொழிற்சாலைகளுக்கு திருப்பி விடப்பட்டது. மானியம் தரப்பட்ட யூரியா ரசாயன தொழிற்சாலைகளுக்கு திருப்பி விடப்படுவதை நிறுத்த வழிஎதையும் கண்டறியவில்லை என்பதை 70 ஆண்டுகளாக அரசாங்கத்தை நடத்தியவர்கள் உணரவில்லை. இதனால் அரசின் கருவூலத்திற்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டது.

நாங்கள் பொறுப்பேற்றோம், வேம்பு கலந்த யூரியாவை 100 சதவீதம் கொண்டு வந்தோம். வேப்ப எண்ணெய்யும், வேப்பம் பழமும் சேர்க்கப்பட்டால் அந்த யூரியாவை தொழில் துறைக்கு தவறாக பயன்படுத்த முடியாது. இதனால் யூரியா திருட்டைத் தடுக்க முடிந்தது.

பணக்காரர்களுக்காக பணியாற்றுவோர் இந்த நடவடிக்கைக்காக இப்போது கவலைப்படுகிறார்கள். ஆனால் எமது விவசாயிகள் யூரியாவுக்காக வரிசையில் காத்திருப்பதில்லை. கள்ளச் சந்தையில் யூரியா வாங்க அவர்களிடம் வசதியில்லை. யூரியாவுக்காக காவல் துறையினரால் அவர்கள் அடிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. இப்போது அவர்கள் அதிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக யூரியா கிடைக்கவில்லை என்ற ஒரு புகார் கூட எழவில்லை. ஏனெனில் யூரியா திருட்டை நாங்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறோம்.

சகோதர சகோதரிகளே

ஊழலையும், மோசடியையும் எதிர்த்து நான் போராடி வருகிறேன். இந்த திசையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று ராஞ்சியில் குழாய் மூலம் சமையல் எரிவாயு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். எரிவாயு தொகுப்பு, கண்ணாடி இழைக் கட்டமைப்பு, தண்ணீர் தொகுப்பு, மின்சார தொகுப்பு மற்றும் அனைத்து வகையான நவீன வசதிகள் 21 ஆம் நூற்றாண்டில் அடிப்படைக் கட்டமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்.  ஜார்க்கண்ட் ஏன் பின்தங்கியிருக்க வேண்டும். விரைவாக வளர்ச்சி அடையும் நகரங்களில் ஒன்றாக ராஞ்சி இருக்கும். இது இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும். இந்தக் கனவோடு எரிவாயு தொகுப்புக்கான பணிகளை மேற்கொள்வதென நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு கிடைக்கும். எதிர்காலத்தில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஓடிசா, அசாம் ஆகிய மாநிலங்களில் 70 மாவட்டங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு அனுப்பப்படும்.

சமையல் அறைகளை புகையற்றதாக மாற்ற வேண்டும் என்பது எங்களின் கனவாக இருந்தது.  இந்த இலக்கை எட்டுவதற்கு உஜ்வாலா திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இந்த திசையில் எங்களின் 2-வது நடவடிக்கை குழாய் மூலம் எரிவாயு வழங்குவதாக இருக்கும். மேலும் 3-வது நடவடிக்கை பற்றியும் ஆலோசித்து வருகிறோம். சூரிய சக்தி மூலம் தூய்மையான சமையல் என்பது அடுத்த நடவடிக்கையாகும். இதனால் குறைந்த செலவில் சூரிய சக்தியை பயன்படுத்தி உணவை சமைக்க முடியும். இந்த திசையில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தியோகரில் எய்ம்ஸ் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பையும் இன்று நான் பெற்றிருக்கிறேன். கிழக்கு இந்தியாவிலிருந்து ஏராளமான நோயாளிகளை தில்லியில் உள்ள எய்ம்ஸ்சுக்கு மாற்ற வேண்டி உள்ளது. ஏழைகளால் இதனைத் தாங்க இயலாது. ஆகவே ஏழையிலும் ஏழையாக இருப்போருக்கும் மிகச் சிறந்த வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் கிழக்கு இந்தியாவில் எய்ம்ஸ் கட்டமைப்பை பரவலாக்க நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். அதே போல் தியோகர் என்பது ஆன்மீக மையமாகும். இது பகவான் போல்நாத்தின் பூமி. இது ஒரு சக்தி பீடமும் கூட. நாடு முழுவதிலுமிருந்து இங்கே வருவதற்கு மக்கள் விரும்புகிறார்கள். இது சுற்றுலாவிற்கான பெரும் ஆதாரத்தைக் கொண்டுள்ளது. எனவே இதனை விமானம் மூலம் இணைப்பதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

சுற்றுலா அமைச்சகமும் இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.  சாதாரண செருப்பு அணிந்த மக்களும் விமானம் மூலம் பயணம் செய்ய வேண்டும் என்பது எங்களின் கனவாகும். கடந்த ஆண்டு ரெயில்வேயின் குளிர் சாதனப் பெட்டிகளில் பயணம் செய்தவர்களை விட விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். சாமானிய மனிதரின் வாழ்க்கையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதற்கு இதுவே சான்றாகும்.

சகோதர சகோதரிகளே

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். 2022-க்குள் ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என்பது எங்களின் கனவாகும். ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை, குடிநீர் விநியோகம், மின் விநியோகம் மற்றும் அருகிலேயே பள்ளிக்கூடங்கள் என்பதை நோக்கமாக கொண்டது இந்த திட்டம். சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை குறிக்கும் 2022-க்குள் வீடு இல்லாமல் ஒருவரும் இருக்கக் கூடாது. இந்த கனவோடு நாங்கள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

சகோதர சகோதரிகளே

இந்த வளர்ச்சிப் பயணத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்று நான் வலியுறுத்துகிறேன். கவுரமான பாதைக்கு நாடு தற்போது மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் சாமானிய மனிதர் கவுரவத்தோடு வாழ்கிறார். கவுரவத்திற்காக வாழ்கின்றவர்களுக்கும், கவுரவத்திற்காக பாடுபடுகின்றவர்களுக்கும் அரசு துணையாக இருக்கும்.

சகோதர சகோதரிகளே

உங்களின் கனவுகளை நிறைவேற்றும் முக்கியமான இந்தப் பொறுப்புடன் நாங்கள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களின் வாழ்த்துக்களை பொழிந்திருக்கிறீர்கள். தற்போதுள்ள ஜார்க்கண்ட் மகத்தான உச்சத்தையும் முன்னேற்றத்தையும் அடைந்து புதிய ஜார்க்கண்டை நோக்கி செல்லும் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.