பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தபால் – தந்தி கட்டுமானப்பணி சேவை குரூப் ஏ – பணியிடங்களை மறு ஆய்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்களின் எண்ணிக்கை 105-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் காரணமாக, தொலைத்தொடர்புத் துறை மற்றும் அஞ்சல் துறையில், செயல்பாட்டுத் தேவைக்கேற்ப தலைமையகத்திலும், கள அலுவலகங்களிலும், பணியிடங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. தபால் –தந்தி, கட்டுமானப்பணி சேவைப் பிரிவில் அதிகாரிகளின் தேக்கத்தைக் குறைக்க முடியும். இந்தப் பணியிடங்களுக்கு புதிதாக ஆள்சேர்ப்பு நடத்துவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டிருப்பதுடன், தற்போது பதவியிலிருப்பவர்களுக்கு
எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்தப் பணியிடங்களை படிப்படியாக ஒழிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.