Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயலில் சிக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்


 

தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயலில் சிக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் புயல் சீற்றத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க தேவையான அனைத்து உதவிகளையும்  வழங்குவதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர், மாநிலத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மாநிலத்திற்கு  தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.  தமிழக மக்கள் பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்க தாம் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.