Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தர்-எஸ்-சலாமில் பிரதமர் முன் சூரிய மின்சக்தி ஊரக பெண் பொறியாளர்கள் திறன் விளக்கம்

தர்-எஸ்-சலாமில் பிரதமர் முன் சூரிய மின்சக்தி ஊரக பெண் பொறியாளர்கள் திறன் விளக்கம்

தர்-எஸ்-சலாமில் பிரதமர் முன் சூரிய மின்சக்தி ஊரக பெண் பொறியாளர்கள் திறன் விளக்கம்


‘சோலார் மம்மாஸ்’ எனப்படும் 30 பேர் கொண்ட சூரிய மின்சக்தி ஊரக பெண் பொறியாளர்கள் குழு பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இன்று சூரிய மின் சக்தியில் தங்களுக்கு உள்ள திறன்களை செயல் விளக்கம் செய்து காட்டினர். இந்த குழுவில் உள்ள பெண்கள் தான்சானியா மற்றும் சில ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் சூரிய மின்சக்தி விளக்குகளை பொருத்துதல், பழுதுபார்த்தல், பராமரித்தல் ஆகிய பணிகளை செய்து வருகிறார்கள். மேலும் தேன் எடுத்தல் மற்றும் தையல் கலை திறன்களையும் செய்து காட்டினர். பின், “வீ ஷால் ஓவர்கம்” என்ற பாடலை பாடினர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் டிலோனியா கிராமத்தில் உள்ள “பேர் பூட்” என்ற கல்வி நிறுவனம் “சோலார் மம்மாஸ்” என்று அழைக்கபடும் சூரிய மின்சக்தி கிராமப்புற பெண் பொறியாளர்களுக்கு இந்த பயிற்சியை அளித்து வருகிறது. இந்த நிறுவனம் இந்திய அரசின் உதவியோடு சூரிய மின்சக்தி விளக்குகளை பொருத்துதல், பழுதுபார்த்தல், பராமரித்தல் ஆகிய பயிற்சிகளை இந்த பெண்களுக்கு அளித்து ஊக்குவித்து வருகிறது.

இந்நிறுவனம் தான்சானியா நாட்டில் உள்ள ஜன்ஜிபார் தீவு மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் மற்ற நாடுகளிலும் பேர் பூட் பெண்கள் தொழில் பயிற்சி கல்லூரியை நடத்தி வருகிறது. இந்த கல்லூரி மூலம் பெண்களுக்கு சூரிய மின்சக்தி திறன் பயிற்சி அளிக்கப்பட்டு சூரிய மின்சக்தி கருவிகளும் வழங்கப்படுகிறது. தேனீ வளர்த்தல், தையல் கலை போன்ற பல வேலைவாய்ப்பு பயிற்சிகளும் இந்த கல்லூரியில் வழங்கப்படுகிறது.