Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தாய்பெயில் உள்ள இந்திய தாய்பெய் கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள தாய்பெய் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் இடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


தாய்பெயில் உள்ள இந்திய தாய்பெய் கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள தாய்பெய் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் இடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இரு தரப்பு முதலீடுகளை ஒப்பந்தம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தாய்பெய் கழகம் மற்றும் தாய்பெய் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் இடையேயான பரஸ்பர முதலீடுகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். முதலீடு தொடர்பான விஷயங்களில் சம வாய்ப்பு, பாரபட்சமின்மை ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் இந்த ஒப்பந்தம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். இதன் மூலம் முதலீட்டிற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகும். வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு உகந்த நாடாக இந்தியா மாறவும் இது உதவும்.

***