Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு. அனில் மாதவ் தவே மறைவு; பிரதமர் இரங்கல்


மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் (தனிப்பொறுப்பு) திரு. அனில் மாதவ் தவே மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மிகவும் மதிப்பிற்குரிய நண்பரான மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு. அனில் மாதவ் தவேவின் திடீர் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. எனது இரங்கல்கள்.

அர்ப்பணிப்புடன் சேவை புரிந்த பொது ஊழியராக திரு. அனில் மாதவ் தவே நினைவுக் கூறப்படுவார். சுற்றுச்சூழல் பராமரிப்பில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

நேற்று மாலை, திரு. அனில் மாதவ் தவேவுடன் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதித்தேன். அவரது மறைவு எனது சொந்த இழப்பாகும் என்று பிரதமர் கூறினார்.