Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு மோகன் லால் மிட்டலின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


திரு மோகன் லால் மிட்டலின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில்அவர் குறிப்பிட்டதாவது:

திரு மோகன் லால் மிட்டல்தொழில்துறை உலகில் தனக்கென தனித்துவமான இடத்தைப்‌ பிடித்திருந்தார். அதே நேரத்தில்அவர் இந்திய கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சமூக முன்னேற்றத்திற்கான அவரது ஆர்வத்தைப் பிரதிபலிக்கும் வகையில்பல்வேறு முயற்சிகளை அவர் ஆதரித்தார். அவரது மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன். அவருடனான பல்வேறு கலந்துரையாடல்களை என்றும் நினைவில் கொள்வேன். அன்னாரது குடும்பத்தினருக்கும்ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”

***

TV/BR/SE