Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு. லஷ்மண்ராவ் இனாம்தார் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி 2017, செப்டம்பர், 21 அன்று கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் ஆற்றிய ஆங்கில உரை

திரு. லஷ்மண்ராவ் இனாம்தார் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி 2017, செப்டம்பர், 21 அன்று கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் ஆற்றிய ஆங்கில உரை

திரு. லஷ்மண்ராவ் இனாம்தார் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி 2017, செப்டம்பர், 21 அன்று கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் ஆற்றிய ஆங்கில உரை

திரு. லஷ்மண்ராவ் இனாம்தார் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி 2017, செப்டம்பர், 21 அன்று கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் ஆற்றிய ஆங்கில உரை


இங்கு குழுமியிருக்கும் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வருகை புரிந்திருக்கும் அனைத்து பிரமுகர்களும் கூட்டுறவு இயக்கத்தில் தொடர்புடையவர்கள்.

திரு.லஷ்மண்ராவ் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன், நீங்கள் அனைவரும் நாள் முழுவதும் விரிவாக கலந்துரையாடி, இக்கூட்டுறவு இயக்கத்திற்கு மேலும் உத்வேகம் அளிப்பதற்கான வழிகளை கண்டறிவது குறித்தும், சாதாரண மக்களின் பிரச்சினையை கூட்டாக தீர்ப்பதற்கான வழிகள் மற்றும் புதிய சக்தியை ஊட்டுவது குறித்து கண்டறிவதுடன், சமூகத்தின் மீது உணர்திறனை பராமரித்து, பிரச்சினைகளுக்கு கூட்டுறவு மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தீர்வுகளை காண உள்ளீர்கள்.

மாபெரும் ஆன்மாக்களை உருவாக்குவதில் நம் நாடு செழிப்பானது. ஒவ்வொரு காலக் கட்டத்திலும், ஒவ்வொரு பகுதியிலும், தம் வாழ்நாளில், சமூகத்திற்காக வாழ்ந்த மற்றும் சமூகத்திற்கு சிலவற்றை அளித்த பெரும்பாலானவர்கள் இருந்துள்ளனர்.

வரலாற்றில் எந்த காலக்கட்டத்திலும் மற்றும் இன்றும் கூட, இம்மண்ணின் எந்த பகுதியிலும் சமூகத்திற்கு அர்ப்பணிக்காத எவரையும் நாம் காண இயலாது. தொலைக்காட்சியின் காரணமாகவும், பத்திரிக்கைகளின் காரணமாகவும், விளம்பரங்களின் காரணமாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் காரணமாகவும் பலர் தங்கள் வாழ்நாளிலேயே விவாதத்திற்குரிய பொருளாக ஆகின்றனர்; மற்றும் அவர்கள் விவாதப் பொருளாக ஆகிவிடுவதால், சில நேரங்களில் அவர்களது உண்மையான தோற்றத்தைவிட பெரிதாக காணப்படுகின்றனர். எனினும், பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்திக்காகவோ, தொலைக்காட்சி திரைகளில் மின்னாத பெருமளவிலான அத்தகைய மக்களை இந்நாடு கொண்டுள்ளது. அவர்கள் எப்போதும் கரகோஷங்களையோ அல்லது அங்கீகாரமோ அல்லது விருதுகளோ பெற்றிருக்கமாட்டார்கள். ஆனால் ஒரு விளக்கு எவ்வாறு மற்றொரு விளக்கை எரியவிட்டு பின்னர் அதுபோல் பல்லாயிரக்கணக்கான விளக்குகளை எரியவிடுவதுபோல், அவர்கள் கொள்கைகள் மற்றும் மாண்புகளுக்காக, தியாகம் புரிந்து, தங்கள் உடல்கள் மற்றும் வாழ்க்கைகளை அர்ப்பணிப்பதுடன், தங்களது வாழ்நாளை அமைதியான தொழிலாளியாக வாழ்ந்து அர்ப்பணிப்பார்கள். அவர்கள் அறியப்படாதவர்களாக இருந்தாலும் கூட நாட்டிற்கான அவர்களது சேவையை குறைத்து மதிப்பிட முடியாது. வக்கீல் சாஹேப் அத்தகைய நபர்களில் ஒருவர்.

இன்று, அவரது பெயரை நாம் கேட்டறிந்ததில்லை மற்றும் நீங்கள் அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறீர்களே என சிலர் வியப்படையலாம். நீங்கள் அவரது பெயரை கேட்டறிந்திருக்க மாட்டீர்கள் என நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதுதான் சரியாக அவரது உரிய தன்மையாகும். தன்னை மறைவிற்குப்பின்னால் வைத்துக்கொள்வது; இத்தகையவற்றிலிருந்து தம்மை முடிந்தவரை விலக்கிக் கொண்டு கூட்டாக மக்களை உழைக்கச் செய்வது, இது தான் கூட்டுறவுகளின் வெற்றிக்கான சூத்திரம் என நான் நம்புகிறேன். இது தான் கூட்டுறவிற்கான மிக முக்கிய சூத்திரம் ஆகும்.

மக்களின் வளர்ச்சிக்கான அவர் தன் வாழ்வை அர்ப்பணித்தார்; அவர் இதனை நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு வழியாக கண்டறிந்தார். அவருடன் எனது வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட கிடைத்த வாய்ப்பு எனது மிகப் பெரிய அதிர்ஷ்டமாகும். அவரது வழிகாட்டுதலில் நான் எனது இளைய வயதில் பல ஆண்டுகளை செலவழித்துள்ளேன். அதனால் தான், அவரது வாழ்க்கை எனக்கு உணர்வூட்டுதற்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. அவரது வாழ்க்கையை குறித்து நான் புத்தகம் எழுதும்போது; அது 25-30 ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.

நான் அவருடன் நெருங்கி வாழ்ந்தபோதும்கூட, அவரது வாழ்க்கையை கூர்ந்து நோக்கும்போது நான் ஆச்சரியப்படுவேன். நான் அவருடன் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். ஆனால், அவரது மறைவிற்கு பின்புதான் பலவற்றை அறிந்துகொண்டேன். அவர் எவ்வாறு தனது வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதற்கு அது ஒரு சிறந்த உதாரணமாகும். இந்த மாபெரும் பாரம்பரியத்தின் முத்தாக பணியாற்றிய அவர் மென்மையான வாழ்க்கை முறையை கடைபிடித்ததுடன், அவரது சக ஊழியர்கள் திறன்களை வலுப்படுத்தவும், ஊதியத்திற்கான வலுவை அளிக்கும் வகையிலும், அவர்களது வளர்ச்சி குறித்த வெளிச்சம் அவர்கள் மீது படாதவாறு தொடர் முயற்சிகளை மேற்கொண்டார்.

நூற்றாண்டு விழா தொடர்பாக பல்வேறு திட்டங்கள் உள்ளன. கூட்டுறவு இயக்கத்திற்கு புதிய வலு கிடைக்கும். ஆனால் இன்று, அவரது நூற்றாண்டு விழாவில், கூட்டுறவு இயக்கத்தில் அவரது பங்களிப்பு குறித்த திசையில் முன்னேறும் வகையில், நாள் முழுவதும் இப்பிரச்சினை குறித்து நீங்கள் விரிவாக கலந்துரையாட உள்ளீர்கள். கூட்டுறவுத் துறையில் மிகச் சிறந்த உலக நடப்புகள்/வழிமுறைகள் குறித்து நீங்கள் கலந்துரையாட உள்ளீர்கள்.

விவசாயத் துறையில் கூட்டுறவு மூலம் எவ்வாறு நாம் முன்னேற்ற முடியும்? 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை எவ்வாறு இருமடங்காக உயர்த்த முடியும்? நவீன இந்தியாவிற்கு தேவைக்கேற்பவும், வளர்ச்சிக்கான அத்திசையில் எவ்வாறு அவர்களை தயார் செய்ய முடியும்? என்ற நோக்கில் நமது விவசாயத்தையும், ஊரக வாழ்க்கையையும் வளப்படுத்திட நாம் கடைபிடிக்க வேண்டிய நற்செயல்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய தீயச் செயல்கள் யாவை? கிராமங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு நகரங்கள் வளர்ச்சியடைந்துள்ளதால், இது தற்போது சாத்தியமில்லை. சமமான வளர்ச்சி தேவைப்படுகிறது. முன்னேற்றத்திற்கான சமமான வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. சமமான முன்னேற்றம் மற்றும் சமமான வாய்ப்புகளுக்கு கூட்டுப் பணியே அடிப்படையாகும். சில அமைப்புமுறைகள் காலம் கடந்தவையாக ஆகின்றன.

கூட்டுறவுத் துறையில் உள்ள ஒவ்வொரு நபரும் இத்தகைய பிரச்சினைகளில் பிரதிபலிக்க வேண்டும். கூட்டுறவு ஒரு அமைப்பு என்றும், சட்டப்பூர்வ அமைப்பு என்றும், சில விதிகள், அரசியல் சாசன கட்டமைப்புகளின் கீழ் உருவாக்கப்பட்டவை என்றும், அந்த கட்டமைப்புகளில் நம்மை பொருத்திக் கொண்டால், நாம் தாமாகவே கூட்டுறவாக ஆகிவிடுவோம் என்றும் நம்மிடையே இந்த புரிந்துணர்வு வளர்க்கிறது. அது மிகப் பெரிய தவறாகும் என நான் நினைக்கிறேன்

இது ஒரு மிகப் பெரிய நாடு. அமைப்புகள் தேவைப்படுகிறது, விதிகள் மற்றும் அமைப்பு முறைகள் தேவைப்படுகிறது, மற்றும் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவையும் தேவைப்படுகிறது, இது அடிப்படையான தேவையாகும். ஆனால் கூட்டுறவு அவ்வழியில் செயல்படாது, கூட்டுறவு ஒரு உணர்வாகும், அது ஒரு அமைப்பு இல்லை, அது ஒரு உணர்வு. இந்த உணர்விற்கு மாண்புகள் அவசியமாகும். அதனால் தான் திரு.இனாம்தார் அவர்கள், மாண்புகள் இல்லாமல் கூட்டுறவு இல்லை என பலமுறை கூறுவார்கள்.

இன்று, அந்த உணர்வை நாம் இந்த அமைப்பில் எங்கோ தொலைத்துவிட்டதாக சில நேரங்களில் உணரமுடிகிறதா, இல்லையா? கூட்டுறவு உணர்விற்கு புத்துணர்வு அளிக்கவும், வக்கீல் சாகிப்பை விட பெரிதான உந்துதலை நாம் பெறுவோமா? மற்றும், கூட்டுறவு உணர்விற்கு மேலும் வலுவினை நாம் அளிக்கும்போது, அமைப்பில் சில குறைகள் இருப்பின், அவற்றை சீர் செய்ய வேண்டும்.

நமது நாட்டில், கூட்டுறவு இயக்கத்தின் முழுமைக்கும் கிராமமே அடிப்படையாக உள்ளது. ஆனால், நகர்ப்புற கூட்டுறவு சங்கங்கள் அதே விதிகள் மற்றும் நெறிமுறைகள் கீழ் துவங்கி வளர்ச்சியடையும்போது, குறிப்பாக வங்கித் துறையில், அதுவும் நகர்ப்புறங்களில், பின்னர் மாற்றங்கள் ஏற்பட்டு, அமைப்புமுறையில் முறிவு ஏற்படத் துவங்கியவுடன் அச்சமும், சந்தேகங்களும் விரிவடைய துவங்கியதை நாம் மறுக்க முடியாது. இன்றும் கூட, ஊரக வாழ்க்கையுடன் தொடர்புள்ள கூட்டுறவு இயக்கங்களில் சில புனிதத்தன்மை இருப்பதை உணர முடிகிறது.

விவசாயிகள் கூட இது அவருக்கான சரியான பாதை என உணர்ந்துள்ளனர். இதற்காகவே கூட்டுறவு இயக்கத்தில் தங்களது நேரத்தை செலவிட்ட மனிதர்களும், ஏழை விவசாயிகள், கிராமத்திற்காக இதன் மூலம் ஏதேனும் செய்தோம் என்று உணர்கின்றனர். இவற்றை எல்லாவற்றையும் குறித்து நீங்கள் இன்று விவாதிக்க இருக்கிறீர்கள். எனது மனதில் உள்ள சிறிய தலைப்பை நான் உங்களுடன் பகிர விரும்புகிறேன், அது குறித்து நீங்கள் கலந்துரையாடுவீர்கள் என நான் நம்புகிறேன்.

இந்திய விவசாயிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன, ஆனால் நமது விவசாயி சில்லறை விலையில் மொத்த விலையில் விற்பதை நாம் காண வேண்டும். அவர் மொத்த விலையில் வாங்கி, சில்லறை விலையில் விற்கும் வகையில் இம்முறை மாற்றியமைக்கப்படுமா? அப்போது அவரை எவராலும் ஏய்க்க முடியாது. அவரை எந்த நடுநபராலும்/தரகரும் பயன்படுத்திக் கொள்ள இயலாது. பால் துறை, கூட்டுறவு பால் குறித்து படித்தவர்கள், விவசாயி மொத்த விலையில் வாங்கி விற்கும் தனித்துவ நிலையை குறித்துக் கொள்ளுங்கள். விவசாயி மொத்த விலையில் பெற்று விற்கும் உன்னதமான நிலையே பால் துறையின் வெற்றிக்கு அடிப்படையாகும் என்பதை பாருங்கள். ஏன்? அவர், முன்பு பாலை உற்பத்தி செய்து, அதனை ஒரு லிட்டர் பால் என்ற வீதத்தில் 10 வீடுகளில் விற்பனை செய்து வந்தார். இன்று அவர் ஒரு சேகரிப்பு மையத்திற்கு சென்று அதே 10 லிட்டர் பாலை விற்கிறார், இது அவர் மொத்த சந்தையில் விற்பதாகும். மற்றும் அவர் பெறுதலையில் பால் மூலம் பெறுகிறார், தனது கால்நடைகளுக்கான உணவு, அவைகளுக்கான மருந்துகள் மற்றும் அவரது கால்நடைகளுக்கு பாதுகாப்பு தேவையெனில், அப்போது அனைத்து வசதிகளும் கிராம முழுமைக்கும் கூட்டாக வழங்கப்படும்.

இதன் காரணமாக, பால் மூலம் அவர் சில மற்றும் இதர பயன்களை தொடர்ந்து பெறுவதுடன், அவர் பாதுகாக்கப்படுகிறார், அது கூடுதல் வருமானத்திற்கும் வழியாகிறது. மற்ற எந்தத் துறையிலும், அவருக்கு ஒரு சிரமம் உள்ளது. பாருங்கள், அவர் தனது பாலை தனியார் துறைக்கு மொத்த விலையில் விற்கும்போது, அவருக்கு இத்தகைய வருமானம் கிடைக்காது. அது கூட்டுறவு துறையானதால், அது அவரது வருமானத்திற்கான அடிப்படையாக அமைந்தது. நாம் அத்தகைய கூட்டுறவு இயக்கத்தை துவங்குவோமா, பாரம்பரிய முறைப்படி ஏற்கனவே ஒன்று உள்ளது. முன்பு ஐந்து கூட்டுறவுகள் இருந்தன, அவற்றை அந்த மக்கள் நடத்தி வருகின்றனர், நான் அவர்களுக்கு காண்பிப்பேன், நான் ஆறாவது ஒன்றை உருவாக்குவேன். கூட்டுறவின் புதிய முறை ஒன்று உள்ளது. அந்த ஐந்தும் இயங்கினால், அவர்கள் அதனை இயக்கட்டும். ஆனால் எவரும் ஒன்றும் செய்யாத அத்தகைய 10 துறைகள் உள்ளன. அத்துறைகளில் உள்ள பிரச்சினைகளை நாம் கூட்டுறவின் மூலம் தீர்க்க இயலுமா, நான் அதை செய்யட்டுமா? கூட்டுறவு தொடாத அத்தகைய துறைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை கூட்டுறவு தொடுமானால், அவற்றுக்கு உடனடியாக போட்டி ஏற்படும். அது சர்க்கரையாக இருந்தாலும், பாலாக இருந்தாலும், அதற்கு அதிகளவிலான போட்டி இருக்கும். எங்காவது எதிலாவது பலன் இருக்குமெனில், அவற்றுக்கு போட்டி ஏற்படுவது இயற்கையான விஷயம். இருப்பினும், பல்வேறு துறைகளில் ஒட்டுமொத்த தலைமுறையும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே, கூட்டுறவு வலுப்பெறும்.

குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அடிப்படையாக மாற்றக்கூடிய புதிய ஆற்றலுடன் புதிய சந்ததியை கூட்டுறவு இயக்கத்தில் நாம் நாம் ஈடுபட செய்ய முடியுமா? நமது நாட்டின் தன்மைக்கேற்ப கூட்டுறவு இயக்கம் முழுவதுமாக பொருந்தியுள்ளது.

அது கடனாக பெறப்பட்ட உத்தியல்ல; அது நமது சிந்தனையின் அடிப்படை வழி மற்றும் அடிப்படை மாண்பிற்கு முழுமையாக பொருந்தியுள்ளது. எனவே, அது இங்கு செழுமையாக வளர்வது இயற்கையாகும். இந்த விஷயத்தில் நீங்கள் உங்களை புகுத்திக் கொள்ள தேவையில்லை. பிற அமைப்புமுறைகள், நாம் அவற்றை கடைபிடித்தால், அவை கடனாக பெறப்பட்ட முறைகள், அந்நிய காரணியின் ஏதாவது தடை இருக்கும். அது நமது இயற்கை, சாதாரண முறையின் ஒரு பகுதியாகும். அவற்றை நாம் கூட்டாக மேற்கொள்வோம்.

உதாரணமாக, இன்று, நாம் வேப்பம் பூசப்பட்ட யூரியாவை பயன்படுத்துகிறோம். இதனால் விவசாயிகள் பெருமளவில் பயனடைந்துள்ளனர். இதனால் யூரியா கிடைப்பதற்கான போராட்டம் குறைந்துள்ளது. ஆனால், யூரியாவில் பூசுவதற்கான வேப்பம் பிசின், அதன் சேகரிப்பு பின் எண்ணெய் எடுத்தல் மற்றும் அதன் பின்னர் அதனை யூரியா தொழிற்சாலைக்கு அனுப்புதல்; இவை அனைத்தும் மிகப் பெரிய விஷயமாக உள்ளது. நமது கிராமப்புற பெண்கள் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி, காடுகளில் காணப்படும் வேப்ப மரங்களிலிருந்து வேப்பம் பிசினை சேகரிக்கத் துவங்கினால், அது புதிய தொழில்முனைவோர் துறையை ஏற்படுத்தும், ஒரு புதிய கூட்டுறவு துவங்கப்படும்.

நீங்கள் விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும், அத்துடன் தேனி வளர்ப்பு குறித்தும் நாம் அதிகமாக வலியுறுத்த வேண்டும், தேன் துறையில் நாம் ஒரு புரட்சியை கொண்டு வர வேண்டும், நம் நாட்டில் இனிப்பு புரட்சியை கொண்டு வர வேண்டும் என நான் எனது பால்பண்ணை தொழிற்சாலைநண்பர்கள் அனைவரிடமும் தொடர்ந்து கூறுவேன். இந்த தேன் புரட்சியை கூட்டுறவுகள் மூலம் கொண்டு வர முடியும். தேன், விவசாயி பால் உற்பத்திக்கான கால்நடைகளை வளர்ப்பது போலவே, 50 தேனீக்களை வளர்ப்பதன் மூலம் தனது வருமானத்தை வருடத்திற்கு 1.5 முதல் 2 லட்சம் எளிதாக உயர்த்திக் கொள்ள முடியும். பாலை சேகரிக்கும் பால்பண்ணையும், தேனை சேகரிக்கலாம், அவை தேனை சேகரிக்கலாம். பால்பண்ணையில் பாலை பதப்படுத்துவது போலவே, தேனையும் பதப்படுத்தலாம், அதற்கு விற்பனை சந்தை உள்ளது. ரசாயன மெழுகு ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கும்போது, தேனி ஒரு கிலோவிற்கு 400-450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, அதற்கு மிகப் பெரிய தேவை உள்ளது. அதற்கு இந்தியாவிலேயே பெரும் விற்பனை சந்தை உள்ளது ஆனால் நமது விவசாயிகள் இன்று அதன் ஒரு பகுதியாக கூட இல்லை. தேனீக்களில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளதுடன், அவை பயிர்களுக்கும் பெருமளவில் நன்மையளிக்கின்றன. தேனை சேகரிக்கும் தேனீ, தோட்டக்கலையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தூதுவராகவும், கால்நடை ஈடுபாட்டாளராகவும் பணியாற்றுகிறது. புதிய துறைகள் ஏராளமாக உள்ளன, அத்துறைகளில் நாம் எவ்வாறு முன்னோக்கி செல்லப் போகிறோம்? என்பதையே நான் கூற விரும்புகிறேன்.

மீனவர் சமுதாயத்தை சேர்ந்த நமது சகோதர, சகோதரிகள், கடற்கரை பகுதிகளில் வசிக்கிறார்கள்; பருவநிலை காரணமாக வருடத்தில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக அவர்களது பணி நின்றுவிடுகிறது. மழைக்காலத்தில் கடலுக்கு செல்வது ஆபத்தானது என்பதால், அது நிறுத்தப்படுகிறது. நமது நாட்டில் கடல்-களை வளர்ப்பு அதிகளவில் புகழ் பெறவில்லை. கூட்டுறவு இயக்கத்தின் மூலம் நமது மீனவ சகோதரர்கள் கடல்-களைகளை வளர்க்கத் துவங்கினால், அது மருந்துத் தொழிற்சாலைகளுக்கு அடிப்படையாக தேவைப்படும் பொருளாக என ஆராய்ச்சி கூடம் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு
கடல்-களைகளால் போதிய விற்பனை சந்தை கிடைக்காதபட்சத்தில், அது கடலில், 45 நாட்கள் வாழ்க்கை முறையை கொண்டது என்பதால், 45 நாட்களுக்கு பிறகு கடற்-களைகள் அறுவடைக்கு தயராகிவிடுவதுடன், ஒவ்வொரு 45 நாட்களுக்கு பின்பாகவும் நீங்கள் அதனை அறுவடை செய்யலாம். கடலின் கீழ் நீங்கள் 45 கடற்-களை பண்ணைகள் உருவாக்கினால், நீங்கள் ஒவ்வொரு நாளும் கடற்-களைகளை அறுவடை செய்யலாம். நீங்கள் ஒன்றும் செய்யாதபட்சத்திலும், நீங்கள் அதன் சாற்றை எடுத்து, அதனை மணலில் தூவலாம். எனவே, கடற்-களை சாற்றின் மூலம் மண்ணை பாதுகாப்பதற்கு மிகப் பெரிய சந்தை உள்ளது. நீங்கள் பெரிதாக ஏதும் செய்ய தேவையில்லை, அதற்கு கடின உழைப்பும் தேவையில்லை. ஏறக்குறைய ஐந்து மாதங்கள் பணியை நிறுத்தி வைக்கும் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் நமது மீனவ சகோதரர்கள் மற்றும் காலை மற்றும் இரவுகளில் பணியாற்ற வாய்ப்புள்ள அவர்களது குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு இந்த வாய்ப்பினை கூட்டுறவு இயக்கத்தின் மூலம் திறந்து வைக்கலாமா? இத்தகைய சிறிய விஷயங்கள் நமது கிராமப்புற பொருளாதாரத்தில் மாபெரும் மாற்றத்தில் நமது நாட்டில் கூட்டுறவு இயக்கங்கள் கொண்டு வர இயலும் என நான் கூற விரும்புகிறேன்.

அவர்கள் கூட்டுறவு இயக்கத்தில் வக்கீல் சாகிப் கொண்ட உணர்வினை பாதுகாக்கும் வகையிலும், கூட்டுறவு இயக்கத்திற்கு அவர் அளித்த மாண்புகளின்படியும், கூட்டுறவு இயக்கத்திற்கு உணர்வுத் திறனை அளிக்க வேண்டும் என்ற அவரின் அழைப்பின்படியும், அடிப்படை காரணிகள் மற்றும் அடிப்படை மாண்புகளின் படியும், சமமான கூட்டுடன், சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த இயக்கத்தை மேலும் விளம்பரப்படுத்த வேண்டும், கூட்டுறவு இயக்கம் என்ற செல்லிற்கு உண்மையான பொருளாக அவர்கள் பெருமளவில் மக்களை இதில் ஈடுபடுத்த வேண்டும் என இன்று இங்கு குழுமியிருக்கும் கூட்டுறவு இயக்கத்தில் ஈடுபட்டுள்ள எனது நண்பர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்,

அந்த நம்பிக்கையுடனும், வக்கீல் சாகிப்பின் புனித நினைவுகளுடனும், உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

******