பி.எம்.இந்தியா
புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழில்துறை தலைவர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்றார்.
அனைவருக்குமான நலன், அனைவருக்குமான மகிழ்ச்சி என்ற தலைப்பிலான இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள் சமூகத்தினரை மையமாகக் கொண்ட வளர்ச்சி மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.
சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, வேளாண்மை, நிர்வாகம், தொழில்துறை உட்பட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் மாற்றம்மிக்க பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார்.
இந்த உச்சிமாநாட்டில் நடைபெற உள்ள புதுமை கண்டுபிடிப்புகள், ஒருங்கிணைப்பு, செயற்கை நுண்ணறிவின் பொறுப்புமிக்க பயன்பாடு குறித்த உலகளாவிய விவாதத்தை செழுமைப்படுத்தும் என்றும் முற்போக்கான, புதுமையான மற்றும் வாய்ப்புகள் சார்ந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாற்றத்தக்க நடவடிக்கையில் 1.4 பில்லியன் மக்கள், வலுவான மின்னணு பொது உட்கட்டமைப்பு, துடிப்புமிக்க புதுமை கண்டுபிடிப்பு சூழல், அதிநவீன தொழில்நுட்ப ஆராய்ச்சி மூலம் இந்தியாவின் தலைமைத்துவத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
செயற்கை நுண்ணறிவில் இந்தியாவின் முன்னேற்றங்கள், இலட்சியம், பொறுப்பு ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கின்றன என்றும், தொழில்நுட்ப மேம்பாட்டில் நாட்டை முன்னணியில் திகழச் செய்வதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;
“செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதிக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்துள்ளன! தில்லி பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழில்துறை தலைவர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன்.
அனைவருக்குமான நலன், அனைவருக்குமான மகிழ்ச்சி என்ற தலைப்பிலான இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள் சமூகத்தினரை மையமாகக் கொண்ட மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது என்ற நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது”.
“செயற்கை நுண்ணறிவு தற்போது சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, வேளாண்மை, நிர்வாகம், தொழில்துறை உட்பட பல்வேறு துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சிமாநாடு, புதுமை கண்டுபிடிப்புகள், ஒருங்கிணைப்பு, பொறுப்புமிக்க பயன்பாடு மற்றும் பல்வேறு அம்சங்களில் உலகளாவிய விவாதத்தை செழுமைப்படுத்தும். இந்த உச்சி மாநாட்டின் இறுதி வடிவம் வளர்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு, வாய்ப்பு சார்ந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்று நான் நம்புகிறேன்”.
“செயற்கை நுண்ணறிவு மாற்றத்தில் நமது நாடு முன்னணியாக திகழ்வதற்கு காரணமான 1.4 பில்லியன் இந்திய மக்களுக்கு நன்றி. மின்னணு பொது உட்கட்டமைப்பு முதல் துடிப்புமிக்க புதுமை கண்டுபிடிப்பு சூழல், அதிநவீன ஆராய்ச்சி வரை செயற்கை நுண்ணறிவில் நமது முன்னேற்றங்கள் லட்சியத்தையும், பொறுப்பையும் பிரதிபலிக்கின்றன.”
***
(Release ID:2228526)
TV/IR/LDN/KR
Bringing the world together to discuss AI!
— Narendra Modi (@narendramodi) February 16, 2026
Starting today, India hosts the AI Impact Summit at Bharat Mandapam in Delhi. I warmly welcome world leaders, captains of industry, innovators, policymakers, researchers and tech enthusiasts from across the world for this Summit. The…
AI today is transforming several sectors, including healthcare, education, agriculture, governance and enterprise. The AI Impact Summit will enrich global discourse on diverse aspects of AI, such as innovation, collaboration, responsible use and more. I am confident that the…
— Narendra Modi (@narendramodi) February 16, 2026
Thanks to the 1.4 billion people of India, our nation stands at the forefront of the AI transformation. From digital public infrastructure to a vibrant StartUp ecosystem and cutting-edge research, our strides in AI reflect both ambition and responsibility.
— Narendra Modi (@narendramodi) February 16, 2026