Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.டி. அடிப்படையிலான பசுமை மருத்துவமனைக்கான செயல் திட்டம் குறித்து புதிய சக்தி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி கழகம், ஜப்பான் மற்றும் நிதி, உடல்நலம் & குடும்ப நலம் அமைச்சகங்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இடையயோன புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, தில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.டி. அடிப்படையிலான பசுமை மருத்துவமனைக்கான செயல் திட்டம் குறித்து புதிய சக்தி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி கழகம் (என்.இ.டீ.ஓ.), ஜப்பான் மற்றும் நிதி (பொருளாதார விவகாரத் துறை), உடல்நலம் & குடும்ப நலம் அமைச்சகங்கள் மற்றும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) இடையயோன புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தனது ஒப்புதலை வழங்கியது.

இத்திட்டம் கீழ்க்கண்ட பணிகளை கொண்டிருக்கும் :

அ.  பொறியியல் மற்றும் வடிவமைப்பு, கட்டுதல் மற்றும் சாதனங்கள் இயக்குதலுக்கு தேவையான ஆய்வுகள்

ஆ. சாதனத்திற்கான அடிப்படை திட்டம் மற்றும் பொறியியல் மற்றும் வடிவமைப்பு

இ. சாதனம் உற்பத்தி மற்றும் போக்குவரத்து

ஈ.  கட்டுமானப் பணி, கட்டுதல் மற்றும் நிறுவுதல்

உ.  சாதனத்தை அமைத்தல்

ஊ. சாதனத்தின் செயல்முறை மற்றும்

எ.  இந்தியாவில் அதன் தொழில்நுட்பத்தை அறிய செய்தல்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நாள் முதல் 2020, மார்ச், 30 வரை நடைமுறையில் இருக்கும்.

தில்லி, எய்ம்ஸ்-ல் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்களை நிறுவி, எரிசக்தி மேலாண்மை அமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்பை செயல்விளக்கம் செய்வதன் மூலம் எரிசக்தியை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இந்த சாதனத்தை செயல்விளக்கம் செய்வதன் மூலம் இந்தியா முழுவதும் இந்த தொழில்நுட்பம் குறித்து பரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.