பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு இன்று புதுதில்லியில் கூடியது. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு மலைப் பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டத்திற்கு இக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. காஷ்மீர் பகுதிகளில் இடம் பெயர்ந்தவர்களுக்கு செய்யப்படும் திட்டங்களுக்கு இணையாக ஆண்டுக்கு ரூ.13.45 கோடி மதிப்பீட்டில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதியில் குறிப்பாக 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் இந்த பள்ளத்தாக்கில் ஏற்பட்ட தீவிரவாதத்தால் பெரும் அளவில் பலர் இடம் பெயர்ந்தனர். இந்த குடும்பங்களுடன் வேறு பல குடும்பங்களும் ஜம்மு மலைப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தன. தற்போது 1054 குடும்பங்கள் ஜம்மு பகுதியில் இருந்து இடம் பெயர்ந்ததாக பதிவு செய்து கொண்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநில அரசு தனி நபருக்கு ரூ.400 வீதம் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றிக்கு ரூ.1600 வீதம் நிவாரண நிதி வழங்கிவருகிறது. மேலும், கால்நடைகளை பராமரிக்கவும் தீவனங்கள் வாங்கவும் ரூ.300 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
மேலும், பொது விநியோக முறையின் கீழ் மாதம் ஒன்றிக்கு ஒரு குடும்பத்திற்கு 9 கிலோ கோதுமையும் 2 கிலோ அரிசியும் 10 லிட்டர் மண்ணெண்ணையும் வழங்கப்படுகிறது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஜம்மு மலைப் பகுதிகளில் தனிநபர் ஒருவருக்கு ரூ.2500ம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு ரூ.10,000 மும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு இதனால் ஏற்படும் முழு செலவையும் மத்திய அரசு ஏற்கும்.
Cabinet approved providing relief to the militancy affected migrants of the hilly areas of Jammu division at par with the Kashmiri Migrants.
— PMO India (@PMOIndia) November 18, 2015