பி.எம்.இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு பெரும் துறைமுகங்களை ஒட்டிய நீர்முகப்புப் பகுதிகளை வழங்கும் கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் தங்களின் புழக்கத்திற்கு துறைமுக இடத்தை பயன்படுத்திக்கொள்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமச்சீரை கடைபிடிக்க இந்த கொள்கை உதவும். அத்துடன் பெரும் துறைமுகங்களின் கொள்திறனை முழுமையாக பயன்படுத்துதல் மற்றும் பெரும் துறைமுக ஆணையங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தலுக்கும் இக்கொள்கை வகை செய்யும். தற்போது பயன்படுத்தாமல் இருக்கும் நிலுவையில் உள்ள கப்பல் இறங்குதளங்கள் (பெர்த்) மற்றும் சொத்துக்களை முழுமையாக பயன்படுத்துதல் மற்றும் புதிய வசதிகளை துறைமுகங்களில் ஏற்படுத்தி சொத்துக்களை அதிகரித்தல் ஆகியவைதான் இக்கொள்கையின் வரம்பாகும்.
இதன் மூலம் பெரும் துறை முகங்களில் துறைமுகம் சார்ந்த தொழில்சாலைகள் தங்களது சரக்கு ஏற்றுமதி இறக்குமதிக்கான வசதிகளையும், போக்குவரத்துக்கு முந்தைய கிடங்கு வசதிகளையும், 30 ஆண்டு காலத்திற்கு பயன்படுத்தி அமைத்துக்கொள்ள சலுகைகள் கொடுக்கப்படும். சலுகை பயன்பாட்டு உடன்பாடு அடிப்படையில், இந்த சலுகை காலம் மேலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீட்டிக்கப்படும்.
அதிகபட்சம் 30 ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு துறைமுக நீர்முகப்பு பகுதிகளில் கப்பல் இறங்குதளங்கள் கரையோர நங்கூரமிடும் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து படகுதுறை, ஒருமுனை நங்கூரமையம் ஆகியவை அமைக்க ஒதுக்கப்படும்.
துறைமுக நிர்வாகம் மற்றும் துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கும் இடையிலான சலுகை உடன்பாடு அடிப்படையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்படும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கடந்த 1996 மற்றும் 1998ம் ஆண்டு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம், அறிவித்த வழிமுறைகள்படி, அதாவது, துறைமுகம் சார்ந்த நிலங்களை, துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு வழங்குவது குறித்த வழிமுறைகள்படி ஒதுக்கீடுகள் செய்யப்படும். சில பெரும் துறைமுகங்களில் இறங்குதளங்கள் மற்றும் இதர வசதிகள் இந்த வழிமுறைகள்படி அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் திறன்மேம்பாடு இன்னும் முழுமைபெறவில்லை.
சாகர்மாலா திட்டத்தின் கீழ், மத்திய அரசு துறைமுக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. அதாவது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் வகையில் பெரும் துறைமுகங்களில் நீர்முகப்பு பகுதிகள் மற்றும் இதர வசதிகள் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். அதன்படி தற்போதைய அமைச்சரவை முடிவின் மூலம் துறைமுக கொள்ளிட பயன்பாடு வசதிகளை வழங்குவதில் வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுக்கும். அத்துடன் துறைமுகம் சார்ந்த நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு துறைமுக வசதிகளை அளிப்பதன் வாயிலாக, பல துறைமுகங்களில் நீண்டகால அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தகத்திற்கு வழி ஏற்படும்.
பின்னணி
தேசிய பொருளதார வளத்தினை ஏற்படுத்தும் வகையில், நாட்டில் நிலையான சமூக கட்டமைப்புகளின் நிலை மற்றும் தரத்தை மேம்படுத்த இந்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது. இந்த இலக்கை எட்டும் வகையில் மத்திய அரசு, தனியார் அரசுதுறை பங்களிப்புக்கு வழிவகை செய்துள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்து பொதுத்துறை நிறுவன வசதிகளை பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. அந்த வகையில் துறைமுகம் சார்ந்த இடங்கள் மற்றும் நீர்முகப்பு பகுதிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்குவது என்பது, துறைமுகங்களில் தனியார் முதலீடு மற்றும் பங்களிப்புக்கு வகைசெய்யும் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.