பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தூய்மை இந்தியா திட்டத்துக்கு உலக வங்கியின் நிதி உதவியான 1,500 மில்லியன் டாலர்கள் பெறுவதற்கு ஒப்புதல் அளித்தது.
மாநிலங்கள் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஊக்கமளிப்பதற்காகவே உலக வங்கியின் உதவித் திட்டம் பயன்படும். 24 செப்டம்பர் 2014ல் மத்திய அமைச்சரவை தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தபோது, மாநிலங்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இப்போதைய ஒப்புதல், உலக வங்கியின் நிதியோடு மாநிலங்களுக்கு ஊக்கமளிக்க பயன்படும்.
இந்த புதிய திட்டத்தின்படி, மாநிலங்களின் செயல்பாடு, நிதி வழங்குவதோடு இணைத்து கண்காணிக்கப்படும். கீழ்கண்ட அளவுகோல்கள் கையாளப்படும்.
1) திறந்தவெளியில் மலஜலம் கழிப்பது குறைப்பு. ஊரக பகுதிகளில், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பது எந்த அளவு குறைந்துள்ளது என்பது ஒப்பிடப்படும்.
2) கிராமங்களில் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்ட கிராமங்களில் அந்நிலை தொடர்ந்து பராமரிக்கப்படும். இத்தகைய கிராமங்களில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் நிதி வழங்கப்படும்.
3) கிராமங்களில் உள்ள மக்கள் தொகையில் அடிப்படையில், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை. அதன் அடிப்படையில் நிதி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியில் பெரும் பங்கு (95 சதவிகிதம்) செயல்பாடுகள் அடிப்படையிலான ஊக்கத்தொகையாக மாநிலங்களுக்கு வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் நிதியை மாநிலங்கள், மாவட்ட, தாலுகா வாரியாக பிரித்து வழங்க வேண்டும். இந்த நிதியின் பயன்பாடு, துப்புரவு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
துப்புரவில் 2019ம் ஆண்டுக்குள் முக்கிய இலக்கை எட்ட, இத்திட்டம் உதவும். துப்புரவுக்கான ஊக்கத்தொகை வழங்கும் இத்திட்டம் மாநிலங்கள் திறந்தவெளி மலஜலம் கழித்தலை குறைப்பது, திறந்தவெளி மலஜலம் கழிக்கும் வழக்கம் இல்லா கிராமங்களை உருவாக்குவது, மற்றும் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு பெருமளளில் உதவும். இது தொடர்பாக ஆண்டுதோறும் ஏற்படும் முன்னேற்றங்களை கண்காணிக்கவும் இத்திட்டம் உதவும். சுத்தமான சுற்றுச் சூழலை பராமரிக்க தூய்மை இந்தியா திட்டத்துக்கு இத்திட்டம் ஆதரவு தரும். துப்புரவு ஆரோக்கியமற்ற உடல்நிலை, ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை போன்றவற்றோடு தொடர்புள்ளதால், தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றி, இவை அனைத்திலும் முன்னேற்றத்தை உருவாக்கும். ஊரக மக்கள் தொகைக்கு ஒரு நல்ல சுகாதாரமான வாழ்க்கைக்கு இது உதவும்.
பின்னணி :
உலக வங்கி அளிக்கும் 1500 மில்லியன் டாலர் நிதியில் (9000 கோடி ஒரு டாலர் 60 ரூபாய்) 1475 மில்லியன் (8850 கோடி) மாநிலங்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கும், 25 மில்லியன் டாலர்கள் (150 கோடி) மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் திட்ட மேலாண்மைக்கும் ஒதுக்கப்படும். ஆகையால் இத்திட்டம் புதிய திட்டம் அல்ல. மாறாக ஏற்கனவே உள்ள திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காகும். தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் என்று இத்திட்டத்தை அழைக்கலாம்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முயற்சிகளை தீவிரப்படுத்தி, உலகலளாவிய வகையில் தூய்மையை அதிகரிப்பது, துப்புரவை அதிகரிப்பது, 2019ம் ஆண்டுக்குள் இந்தியாவில் திறந்தவெளி மலஜலம் கழிக்கும் வழக்கத்தை நீக்குவது ஆகியன இத்திட்டத்தின் நோக்கங்கள். இத்திட்டம் இந்தியாவில் தூய்மைக்கான மிகப்பெரிய திட்டமாகும். திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் வழக்கம் இல்லா கிராமங்களை உருவாக்கி மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் திட்டங்களுக்கு உதவுவதே பிரதான நோக்கமாகும். தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க தூய்மை இந்தியா திட்டத்துக்கு பக்க பலமாக இப்புதிய திட்டம் செயல்படும்.