பி.எம்.இந்தியா
மாண்புமிகு தலைவர்களே,
உங்களது ஒவ்வொருவரின் சொற்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செயற்கைக்கோள் செலுத்தும் இன்றைய நாளில் ஏற்பட்டுள்ள மன உணர்வு உங்களது சிந்தனைகள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
ஒத்த உணர்வுள்ள நாடுகள் மண்டல ஒத்துழைப்பு அமைந்தால், விண்வெளியும் நமக்கு எல்லை இல்லை என்பதை தெற்காசிய செயற்கைக்கோள் உணர்த்துகிறது.
“அனைவரும் வளர்வோம், ஒன்றாக வளர்வோம்” (sabaka saath sabaka vikaas) என்ற நோக்கம் தெற்காசிய நாடுகளில் செயலுக்கும் ஒத்துழைப்புக்கும் வழிகாட்டி விளக்காகத் திகழும். அது, நமது பொருளாதார வளங்களை நம் நாடுகளின் மக்கள் பகிர்ந்துகொண்டு வாழ்வதற்கு அதுதான் சரியான வழியாக அமையும். இதில், தேர்ந்தெடுப்பதிலும், கொள்கையிலும் உண்மையான நம்பிக்கை கொண்டிருக்கும் இந்தியாவைக் கடப்பாடும், வலிமையும் உடைய கூட்டாளியாக நீங்கள் காண இயலும்.
தெற்காசிய செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான நிகழ்வை இன்று கொண்டாடுவதில் நீங்கள் எல்லோரும் என்னுடன் இணைவதற்காக நான் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொலைநோக்கு நிறைவேறுவதில் நீங்கள் எல்லோரும் அளித்துவரும் வலிமையான தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கும் நன்றி.
நிறைவாக, இந்த மண்டலத்தின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் நாம் எல்லோரும் பொதுவான ஒன்று திரண்டு மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற்று, மேலும் மேலும் இது போன்ற கொண்டாட்டங்களைக் காண வேண்டும் என்று விரும்புகிறேன்.
நன்றி, மிகுந்த நன்றி.
***
I thank each one of you for your words: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 5, 2017
This launch tells us that even the sky is not the limit when it comes to regional cooperation: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 5, 2017