Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தெற்கு சூடானிலிருந்து திரும்பிய இந்தியர்களுக்கு பிரதமர் வரவேற்பு


தெற்கு சூடானிலிருந்து திரும்பிய இந்தியர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.

இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் மற்றும் இணை அமைச்சர் ஜெனரல் வி. கே. சிங்கிற்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். சங்கட் மோச்சன் நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு மனோகர் பரிக்கர் ஆற்றிய பங்கிற்கும் இந்திய விமானப் படை, இந்திய ரயில்வே துறை, ஏர் இந்தியா ஆகியவை ஆற்றிய பங்களிப்பிற்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.