Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தெஹ்ரான் நகரில் பாய் கங்கா சிங் சபா குருதுவாராவில் பிரதமர் வழிபட்டார்– பக்தர்களிடையே உரை

தெஹ்ரான் நகரில் பாய் கங்கா சிங் சபா குருதுவாராவில் பிரதமர் வழிபட்டார்– பக்தர்களிடையே உரை

தெஹ்ரான் நகரில் பாய் கங்கா சிங் சபா குருதுவாராவில் பிரதமர் வழிபட்டார்– பக்தர்களிடையே உரை


ஈரானில் தெஹ்ரான் நகருக்கு இன்று மாலை வந்திறங்கியதும் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாய் கங்கா சிங் சபா குருதுவாராவில் குரு கிரந்த் சாஹிபுக்கு மரியாதை செலுத்தினார்.

அங்கு பிரதமருக்கு அங்கியும் வாளும் வழங்கப்பட்டது.

அங்கு கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் தெஹ்ரான் நகரில் நமது செழுமையான பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் இளைய தலைமுறையினரின் மனத்தில் இருத்தி வருவதற்காக சீக்கிய சமுதாயத்தை பாராட்டினார். உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற கொள்கையில் இந்திய மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் அதன் காரணமாக ஒவ்வொருவரையும் அதில் இணைக்க முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

குரு கோவிந்த் சிங்கின் 350-வது பிறந்த வருடாந்திர நிகழ்ச்சி இந்தியாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் கொண்டாடப்படும் என்றும் தங்கள் உயிரை தியாகம் செய்த குருக்கள் குறித்து இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புனித குரு கிரந்த் சாஹிப் வழங்கும் நற்செய்தியை எடுத்துச் செல்லவும் இந்த வருடாந்திர நிகழ்ச்சி உதவும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.