பி.எம்.இந்தியா
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, இன்று ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
பாபுஜியின் காலத்தால் அழியாத லட்சியங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளன என்று திரு மோடி கூறினார். ” நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித குலத்திற்கு சேவையாற்றுவது போன்ற ஆழமாக வேரூன்றியுள்ள அவரது கொள்கைகளைப் பின்பற்றி, வலுவான இந்தியாவை கட்டமைப்பதில், நமது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்திஜியின் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். காலத்தால் அழியாத அவரது லட்சியங்கள், நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளன. ” நீதி, நல்லிணக்கம் மற்றும் மனிதகுலத்திற்கு சேவையாற்றுவது போன்ற ஆழமாக வேரூன்றியுள்ள அவரது கொள்கைகளைப் பின்பற்றி, வலுவான இந்தியாவை கட்டமைப்பதில், நமது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.”
***
(Release ID: 2220751)
TV/SV/KPG/RK
Paid tributes to Mahatma Gandhi at Rajghat. His timeless ideals continue to guide our nation’s journey. We reaffirm our commitment to his principles and to building an India rooted in justice, harmony and service to humanity. pic.twitter.com/ALDjurBryE
— Narendra Modi (@narendramodi) January 30, 2026