Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசப்பிதா மகாத்மா காந்திக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்


தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்புள்ள இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாக விளங்கும் சுதேசி கொள்கைக்கு பாபு எப்போதும் வலுவான முக்கியத்துவம் அளித்தார் என்று திரு மோடி கூறினார். “அவரது ஆளுமையும் செயல்களும் நாட்டு மக்களைக் கடமையின் பாதையில் நடக்க என்றென்றும் ஊக்கப்படுத்தும்” என்று திரு மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று, அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி. வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்புள்ள இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாக விளங்கும் சுதேசி கொள்கைக்கு பாபு எப்போதும் வலுவான முக்கியத்துவம் அளித்தார். அவரது ஆளுமையும் செயல்களும் நாட்டு மக்களைக் கடமையின் பாதையில் நடக்க என்றென்றும் ஊக்கப்படுத்தும்.”

**

(Release ID: 2220637)

TV/SMB/RK