பி.எம்.இந்தியா
கெவாடியாவில் நேற்று நடைபெற்ற டிஜிபிக்கள் / ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேசிய ஒருமைப்பாட்டுக்காக பாடுபடுவோருக்கு சர்தார் பட்டேல் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாட்டை மேலும் பலப்படுத்துவதற்கான முயற்சியில் சிறப்பாக ஈடுபடுவோருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
“இந்தியாவை ஒருங்கிணைப்பதற்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் சர்தார் பட்டேல். எனவே, தேசிய ஒருமைப்பாட்டுக்காக சர்தார் பட்டேல் பெயரில் விருது வழங்குவது, அவருக்கு செலுத்தப்படும் சிறந்த மரியாதையாக அமைவதுடன், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மேலும் பலப்படுத்துவதற்காக ஏராளமானோர் பாடுபடுவதற்கு ஒரு உந்துசக்தியாக அமையும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
******
Yesterday, at the DGPs/IGPs Conference in Kevadia, announced an annual Sardar Patel Award for National Integration. This award would be given for outstanding efforts to further national integration.
— Narendra Modi (@narendramodi) December 23, 2018
Sardar Patel devoted his life towards unifying India. The Sardar Patel Award for National Integration will be a fitting tribute to him and will inspire more people to work towards furthering India’s unity and national integration.
— Narendra Modi (@narendramodi) December 23, 2018