Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய காற்றாலை எரிசக்தி கொள்கைக்கு அனுமதி


தேசிய காற்றாலை எரிசக்தி கொள்கைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதற்கான அனுமதியை அடுத்து, புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி அமைச்சகம் காற்றாலைகளை அமைக்க தேவையான இடங்களை தெரிந்தெடுக்கும். இது இந்தியாவில் கடலோர வர்த்தக மண்டலத்திற்கும் செயல்படும். காற்றாலை எரிசக்தியை உற்பத்தி செய்ய காற்றாலை எரிசக்திக்கான தேசிய கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மத்திய அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து காற்றாலை எரிசக்தி உற்பத்தி செய்யப்படும் இடங்களை அளிக்கும். கடலோரப் பகுதிகளில் காற்றாலை எரிசக்தி மேம்பாட்டிற்கும், மின்சக்தி நிலையங்களை அமைப்பதற்கும் வளர்ச்சிக்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் இந்த அனுமதியின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். 200 கடல் மைல்கள் தூரம் வரையில் இத்திட்டத்தை இந்தியா செயல்படுத்த முடியும்.

இந்தியாவில் 7 ஆயிரத்து 600 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை உள்ளது. இதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, காற்றாலை மூலமாக மின்சக்தியை உருவாக்க முடியும் என்று தெரியவந்துள்ளது. தற்போது அனுமதி அளிக்கப்பட்ட தேசிய காற்றாலை எரிசக்தி கொள்கையின் மூலம் கடலோரத்தில் செயல்படுத்தப்படும் மின்திட்டத்தோடு இந்தியாவின் கடற்பகுதியிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் முதலீட்டாளர்களுக்கும், இக்கொள்கையின் மூலம் பயன்பெற முடியும். காற்றாலை எரிசக்திக்கான தேசிய கழகம் வெளிப்படையான முறையில் விதிமுறைகளை மேற்கொள்ளும்.

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அதற்காக வகுக்கப்பட்ட குறியீடுகளை இக்கொள்கையின் மூலம் நாடு அடைய முடியும். இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.

பின்னணி

நிலையான, செலவு குறைந்த, புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் மின்தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. நிலக்கரியை பயன்படுத்தி மின்சக்தியை தற்போது போட்டியிடக்கூடிய நிலையில் இருக்கும்போது, காற்றாலை மின்சக்தி தொழில்நுட்பத்தின் மூலம் காற்றாலை எரிசக்தி தொழில்நுட்பத்தை தற்போது பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், தற்போது நிலக்கரியை பயன்படுத்தி மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டங்களோடு ஒப்பிடும் நிலை இல்லை. காற்றாலை மூலம் கடலில் மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தில் இந்தியா குறிப்பிட்ட அளவு சாதனையை அடைந்துள்ளது 23 ஜிகாவாட் அளவுள்ள மின்சக்தி காற்றாலை எரிசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் அடைந்துள்ளது.

••••••