தேசிய பாதுகாப்புப் படையினர் துணிச்சல், துல்லியம் மற்றும் கடமையின் மீதான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கின்றனர் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக, அவர்கள் மேற்கொள்ளும் உறுதியான கண்காணிப்பும், மக்களையும், நாட்டின் மிக முக்கியமான சொத்துகளையும் பாதுகாப்பதற்கான அவர்களின் தயார்நிலையும், மிகுந்த நம்பிக்கையையும், பெருமிதத்தையும் ஏற்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:
“தேசிய பாதுகாப்புப் படையின் நிறுவன தினத்தையொட்டி வீரர்களுக்கு வாழ்த்துகள்.
அவர்களது துணிச்சல், துல்லியம் மற்றும் கடமையின் மீதான உறுதியான அர்ப்பணிப்புவீரர்களுக்கு அடையாளமாகத் திகழ்கின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக அவர்கள் மேற்கொள்ளும் உறுதியான கண்காணிப்பும், மக்களையும் நாட்டின் மிக முக்கியமான சொத்துகளையும் பாதுகாப்பதற்கான அவர்களின் தயார்நிலையும், மிகுந்த நம்பிக்கையையும் பெருமிதத்தையும் ஏற்படுத்துகின்றன.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324485®=3&lang=1
(Release ID: 2324485)
****
TV/SV/SH
Greetings to the personnel of the National Security Guard on their Raising Day. They embody courage, precision and an unwavering commitment to duty. Their steadfast vigil against terrorism and their readiness to protect our people and vital national assets inspire immense confidence and pride. @nsgblackcats
— Narendra Modi (@narendramodi) October 16, 2026