Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மரியாதை

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மரியாதை


தேசியத் தலைநகரில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

நமது நாட்டைத் தன்னலமின்றி பாதுகாத்தவர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிப்போம் என்று அவர் கூறினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

“தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினேன். நமது தேசத்தை தன்னலமின்றி பாதுகாத்தவர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கிறோம். அவர்களின் தைரியமும் தியாகமும் ஒருபோதும் மறக்க முடியாதவை. அவர்களுக்கு மரியாதையுடனும் நன்றியுடனும் தலைவணங்குகிறோம், அவர்களது லட்சியங்களை நிலைநிறுத்துவதாக உறுதியளிக்கிறோம்.”

***

AD/PKV/KRS