Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய மாணவர் படை கேடட்டுகள் மற்றும் அலங்கார வாகன ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்


குடியரசு தினக் கொண்டாட்டங்களையொட்டி, டெல்லிக்கு வந்திருந்த அலங்கார வாகன ஊர்தி கலைஞர்கள், பழங்குடியின விருந்தினர்கள், தேசிய மாணவர் படை (என்.சி.சி.) கேடட்டுகள் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட என்.எஸ்.எஸ். தன்னார்வலர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

தீன் மூர்த்தி பவன் புல்வெளியில் கூடிய தேசிய மாணவர் படை கேடட்டுகள் மத்தியில் நடந்தவாறே பேசிய பிரதமர், இந்தியாவின் வேற்றுமை குறித்து குறிப்பிட்டார். ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நம்மைச் சுற்றிலும் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று திரு.நரேந்திர மோடி வலியுறுத்தினார். நாட்டில் மாற்றக்கூடிய மாற்றங்களை இந்தியாவில் உள்ள இளைஞர்களால் கொண்டுவர முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

நமது ராணுவப் படைகளால் தேசம் மிகுந்த பெருமையடைவதாக அவர் தெரிவித்தார். இதே உணர்வுடன், நாட்டுக்காக சேவையாற்றிவரும் துணிச்சலான வீரர்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

காவல் படையைச் சேர்ந்த சிலர், நாட்டுக்காக தங்களது உயிரைத் தந்துள்ளதாகவும், அவர்களது தியாகங்களை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் திரு. நரேந்திர மோடி கூறினார்.

தூய்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க வேண்டியது நமது கடமை என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்த குடியரசு தினம் சிறப்பானது என்று தெரிவித்த அவர், ஏனெனில், நமது கொண்டாட்டத்தில் நம்முடன் 10 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர் என்று கூறினார்.

***