Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய ரூர்பன் இயக்கத்தை பிரதமர் துவக்கி வைத்தார்

தேசிய ரூர்பன் இயக்கத்தை பிரதமர் துவக்கி வைத்தார்


பிரதமர் நரேந்திர மோடி சத்திஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்காவுன் மாவட்டத்திலுள்ள குருபாட்டிலிருந்து தேசிய ரூர்பன் இயக்கத்தை இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ‘கிராமத்தின் ஆன்மாவையும் நகரத்தின் வசதிகளையும்’ கொண்டதாக, தொகுப்பு முறையிலான வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக இந்த ரூர்பன் இயக்கம் அமையும் என்று குறிப்பிட்டார். அனைத்து வசதிகளையும் கொண்ட கிராமங்களை உருவாக்குவதன் மூலம், வசதியான நகரங்கள் என்ற அரசின் முன்முயற்சிக்கு அவை உறுதுணையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். ரூர்பன் தொகுப்புகள் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமைகின்ற பொருளாதார நடவடிக்கைகளின் மையமாகவும், அருகிலுள்ள கிராமங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் அமையும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நாடு புதிய வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இதற்கான ஓர் எடுத்துக்காட்டு இந்த ரூர்பன் இயக்கமானது புதுதில்லியிலிருந்து துவக்கப்படாமல் சத்திஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்காவுன் மாவட்டத்திலுள்ள குருபாட்டிலிருந்து இன்று துவக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கிராமங்கள், பழங்குடிகள் வாழும் பகுதிகளுக்கே இப்போது அரசு நடவடிக்கைகள் கொண்டுவரப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

பொது இடங்களில் காலைக் கடன்களை கழிக்கும் பழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பகுதி என்ற பெருமையை எட்டியுள்ளதற்காக அருகிலுள்ள கிராமங்கள், மக்கள் குழுக்கள் ஆகியவற்றையும் பிரதமர் பாராட்டினார்.

முன்னதாக, வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதைச் சித்தரிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஒரு கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.