Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து


தேசிய வாக்காளர் தினமான இன்று (25.01.2026), பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த இந்த நாள் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். இந்தியாவின் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்த தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடைய அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதை அவர் பாராட்டியுள்ளார்.

வாக்காளர் பங்கேற்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ள பிரதமர், வாக்காளராக இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு சிறப்புரிமை மட்டுமல்ல எனவும், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரது முக்கிய கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக செயல்முறைகளில் எப்போதும் பங்கேற்கவும், ஜனநாயகத்தின் உணர்வை மதிக்கவும், அதன் மூலம் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்தவும் மக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாக்காளராக மாறுவதை கொண்டாட்டத்திற்கான ஒரு தருணம் என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தங்களைச் சுற்றியுள்ள யாராவது, குறிப்பாக ஒரு இளைஞர், முதல் முறையாக வாக்காளராகப் பதிவு செய்யும் போது மகிழ்ச்சியடைந்து கொண்டாடுமாறு மைபாரத் தள தன்னார்வலர்களுக்கு வலியுறுத்தி பிரதமர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

தேசிய வாக்காளர் தின வாழ்த்துகள்.

இந்த நாள் நமது நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான நமது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நாளாகும்.

நமது ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்காக தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

வாக்காளராக இருப்பது வெறும் அரசியலமைப்புச் சலுகை மட்டுமல்ல. அது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரது முக்கியமான கடமையுமாகும். ஜனநாயக செயல்முறைகளில் எப்போதும் பங்கேற்பதன் மூலம் நமது ஜனநாயகத்தின் உணர்வைப் போற்றுவோம். இதன் மூலம் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்துவோம்.”

வாக்காளராக மாறுவது ஒரு கொண்டாட்டத் தருணம்!

தேசிய வாக்காளர் தினமான இன்று, நம்மைச் சுற்றியுள்ள ஒருவர் வாக்காளராகப் பதிவுசெய்தால் நாம் அனைவரும் எவ்வாறு மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பது குறித்து மைபாரத் (MY-Bharat) தன்னார்வலர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன்.”

***

(Release ID: 2218365)

TV/PLM/RJ