Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய வாக்காளர் தினம் –குடிமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் பிரதமர் வாழ்த்து


தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு குடிமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அனைத்து மக்களுக்கு வாக்காளர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது குடியரசை மேலும் வலிமையாக்க மாபெரும் முயற்சிகளை தொடர்ந்து எடுத்துவரும் தேர்தல் ஆணையத்திற்கும் எனது வாழ்த்துகள்.

இந்த ஆண்டின் வாக்காளர் தின விழா “உள்ளடக்கிய மற்றும் தரமான பங்கேற்பு” என்ற மைய பொருளைக் கொண்டு கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் மேலும் பல குடிமக்கள் தேர்தலில் பங்கேற்று நமது குடியரசை மேலும் வலுவடையச்செய்வர்”, என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். .