பி.எம்.இந்தியா
[
252KB ]
2014 ஆம் ஆண்டிற்கான தேசிய வீர விருதை 24 குழந்தைகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய பிரதமர், இந்த குழந்தைகள் செய்த வீரமான செயல்கள் யாவும் நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் ஒன்றாகவும் இறைவன் காட்டும் சான்றாகவும் உள்ளது என்று கூறியுள்ளார். மற்றவர்களுக்காக இறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை, அனால் அனைவருக்கும் மற்றவர்களுக்காக உதவும் வாய்ப்பு கிடைக்கிறது. எனினும், ஒரு சிலர் மட்டுமே இந்த வாய்ப்பை உண்மையில் பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டார்.
துணிச்சலான மற்றும் தன்னலமற்ற நடவடிக்கைகளுக்காக அந்த குழந்தைகளை பாராட்டிய பிரதமர், அவர்கள் விளைவுகளை பற்றி கவலைப்படாமல், தைரியமாக பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது, அவர்கள் தைரியமாக செயல்படுவதை அவர்களாலேயே தடுக்க முடியவில்லை என்றார். அதுதான் இந்த குழந்தைகளின் துணிச்சலான செயல்களில் உள்ள “மிகப் பெரிய அழகு” என்று கூறினார். இந்த செயல்கள் மூலம் அவர்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழந்தைகளுக்கு அதிக பொறுப்பு இப்போதுதான் தொடங்குகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். குழந்தைகளிடம் பேசிய அவர், புகழ் மற்றும் வெற்றி என்று வேண்டுமேனாலும் மழுங்கலாம். எனவே, உங்களின் மனதை என்றும் அமைதியாக வைத்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
அவர்களது குறிக்கோள்கள் மற்றும் கனவுகளை நோக்கி அயராது பயணம் செய்யும் படி குழந்தைகளை அவர் வலியுறுத்தினார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி மேனகா காந்தியும் இந்நிகழ்ச்சியின் போது உடனிருந்தார்.
துணிவான சிறந்த சேவையைச் செய்து தனித்து நிற்கும் குழந்தைகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. மற்ற குழந்தைகளை இது போன்ற சேவைகளுக்காக ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்திய குழந்தைகள் நலக் குழு இந்த விருதினை வழங்கிவருகிறது.