Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய ஷெட்யூல்ட் வகுப்பு நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் அனுமதிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை உயர்த்துதல்.


சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய ஷெட்யூல்ட் வகுப்பு நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (என்.எஸ்.எப்.டி.சி.) அனுமதிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ரூ. 1000 கோடியிலிருந்து ரூ. 1200 கோடியாக உயர்த்துவதற்கான திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (27.01.2016) ஒப்புதல் அளித்தது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஷெட்யூல்ட் வகுப்பு பயனாளிகளுக்கு தங்களது பொருளாதார நடவடிக்கைகளை விரிவாக்கிக் கொள்வதற்கு இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டு ஒப்புதல் பெரிதும் உதவும். மேலும் இவர்கள் தொடர்பான தொலைதூர நடவடிக்கைகள் பெரும்பாலான இச் சமூக மக்களைச் சென்றடைவதற்கும் இது உதவும். என்.எஸ்.எப்.டி.சி. திட்டத்தின் 2015 – 16ம் ஆண்டு இலக்கு 63,000 பயனாளிகளைச் சென்றடைவது ஆகும்.

என்.எஸ்.எப்.டி.சி. தனது திட்டங்களை 32 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலுள்ள 37 மாநில வழிப்படுத்தும் முகமைகள் மூலம் செயல்படுத்துகிறது. மேலும் தொலைதூர இடங்களை சென்றடையும் வகையில் தேவைப்படும் போது என்.எஸ்.எப்.டி.சி. தனது திட்டங்களை தேர்நதெடுக்கப்பட்ட பொதுத் துறை வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் மற்றும் அதர நிறுவனங்கள் மூலம் அமல்படுத்தும்.

பின்னணி:

என்.எஸ்.எப்.டி.சி. சுய வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அதன் இலக்கு குழுவினரிடையே வழிப்படுத்தும் முகமைகள் மூலம் சலுகை வட்டி வீதங்களில் கடன்களை வழங்கும். மேலும் என்.எஸ்.எப்.டி.சி. திறன் / தொழில் முனைவுத் திறன் பயிற்சி திட்டங்களை வேலையற்ற ஷெட்யூல்ட் வகுப்பினருக்கு என ஏற்பாடு செய்து நடத்தும். என்.எஸ்.எப்.டி.சி. – க்கு மத்திய அரசு ரூ. 998.13 கோடியை வழங்கியிருப்பதால் அதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனமான ரூ. 1000 கோடியை ஏறக்குறைய செலவழித்துவிட்டது என்றே கூறலாம். எனவே இத்திட்டத்திலான பணிகளை விரிவாக்குவதற்கு என்.எஸ்.எப்.டி.சி. – க்கு தனது அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை உயர்த்துவது அவசியமாகிவிட்டது.

*****