Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொடங்கிடு இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர், புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான செயல் திட்டம் வெளியீடு

தொடங்கிடு இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர், புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான செயல் திட்டம் வெளியீடு

தொடங்கிடு இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர், புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான செயல் திட்டம் வெளியீடு


பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தொடங்கிடு இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பதற்கு முன்னதாக தொழில் முனைவு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்த பயிலரங்கம் நாள் முழுவதும் நடைபெற்றது.

இந்த விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் புதிய நிறுவனங்கள் தொடங்கும் தொழில் முனைவோருடன் கலந்துரையாடினார். பத்து சிறந்த புதுமையாளர்கள் தங்களது சிந்தனைகள் மற்றும் அனுபவத்தை பிரதமர் முன்னிலையில் பகிர்ந்து கொண்டனர். ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கிடு இந்தியா திட்டத்தை தாம் அறிவித்த போது அது கவனிக்கப்படாமல் போனது என்றும் ஆனால் இன்று மக்களிடையே மக்களின் மனங்களில் பதிந்து போயிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

வெற்றிகரமான தொழில் நிறுவனம் வழக்கமாகவே சிந்தனையினால் ஊக்கம் பெற்றவர் அல்லது மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று விரும்புவரால் உருவாக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது முதன்மையான நோக்கம் அல்ல என்றும் அது தயாரிக்கும் பொருளை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் கூறினார். புதிய தொடக்கத்திற்கான புதுமையாளர்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவிலுள்ள இளைஞர்களை வேலைதேடுவோர் என்ற நிலையிலிருந்து வேலை உருவாக்குவோர் என்ற நிலைக்குமாற்ற வேண்டுமென்பதே தமது விருப்பம் என்று பிரதமர் கூறினார். ஒரு புதிய நிறுவனம் 5 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்தால் கூட அது இந்த நாட்டிற்கு பெரும் சேவையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். பயிர் இழப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இன்னும் புதுமையாளர்கள் கண்ணோட்டம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். புதிய தொடக்கத்திற்கான செயல் திட்டத்தை பிரதமர் வெளியிட்டார். ஒரு புதிய நிறுவனம் தொடங்குவதற்கு நிதியுதவி அளிப்பதற்காக ரூ.10000 கோடி மதிப்புடன் அர்ப்பணிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிதி தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

புதிதாகத் தொடங்கப்படும் இந்த நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் லாபத்திற்கான வருமானவரி முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும். புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கான எளிமையான கொள்கைகள் குறித்து அரசு செயல்பட்டு வருகிறது என்றும் இந்த புதிய நிறுவனங்களின் காப்புரிமை விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

புதிதாக தொடங்கப்படும் வர்த்தகங்களுக்கான காப்புரிமை கட்டணங்களில் 80 சதவிகிதம் விளக்கிக் கொள்ளப்படும் என்றும் 9 தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களில் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு சுய சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். அடல் புதுமைப் படைப்பு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டு புதுமைகளுக்கு ஊக்கமளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

•••••••