Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொலைத்தொடர்பு சேவையாளர்கள் தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைத்தல் மற்றும் அதைச் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பாதுகாப்புத் துறை நிலத்தை அளிப்பதற்கான கொள்கையை திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் செல்போன் கோபுரங்கள் நிறுவுவதற்கு தொலைத் தொடர்புத் துறை (DoT) அனுமதி அளிப்பதற்கான கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களை அமல் செய்வதன் அனுபவத்தின் அடிப்படையில், தொலைத்தொடர்பு சேவையாளர்கள் தொலைத் தொடர்பு கோபுரங்கள் அமைத்தல் மற்றும் அதைச் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பாதுகாப்புத் துறை நிலத்தை அளிப்பதற்கான கொள்கையை திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

திருத்தப்பட்ட கொள்கையை அடுத்து, DoT -யிடம் IP-I ஆக பதிவு செய்துள்ள தொடர்பு சேவை உரிமதாரர்கள் மற்றும் கம்பெனிகள், பகிர்ந்து கொள்ளக் கூடிய தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் அவை சார்ந்த கட்டமைப்புகளை அமைப்பதற்கு, குத்தகை அடிப்படையில் பாதுகாப்புத் துறை நிலம் அளிக்கப்பட்டு, பாதுகாப்புத் துறை பகுதிகள் மற்றும் கண்டோன்மென்ட்டுகளில் அனுமதி அளிக்கப்படும்.

இதன் மூலம் கண்டோன்மென்ட்டுகள் மற்றும் ராணுவ நிலையங்கள் உள்ள பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவையின் தரம் மேம்படும்.