Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதிமுறைகள் குறித்த தொழிற்சங்கங்கள் சட்டம், 1926-ல் திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதிமுறைகள் குறித்த தொழிற்சங்கங்கள் சட்டம், 1926-ல் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பயன்கள்:

ஒப்புதல் அளிக்கப்பட்டதால் பின்வரும் பயன்கள் கிடைக்கும்:

  1. தொழிற்சங்கங்களுக்கு மத்திய மற்றும் மாநில அளவில் அங்கீகாரம் கிடைக்கும்.
  2. முத்தரப்பு அமைப்புகளில் தொழிலாளர்களுக்கு உண்மையான பிரதிநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
  3. தொழிலாளர் பிரதிநிதிகளை தன்னிச்சையாக அரசு நியமனம் செய்வது தடுக்கப்படும்; மற்றும்
  4. வழக்குகள் மற்றும் தொழில் அமைதியின்மை குறைக்கப்படும்.

முத்தரப்பு அமைப்புகளில் தொழிலாளர் தரப்புப் பிரதிநிதிகளை அரசு நியமனம் செய்யும் நடைமுறை அதிக வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற உத்தேச மசோதா வகை செய்யும். இதன்படி அங்கீகாரம் அளிக்கப்படும் தொழிற்சங்கங்கள் தொழில் நல்லிணக்கத்தைப் பராமரிக்கும் பொறுப்புக்கு உள்ளாகும் வகையில் இருக்கும். மத்திய / மாநில அளவில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதால், வெவ்வேறு துறைகளில் இந்த அமைப்புகள்  பிரிவுகளாக உருவாகும் நிலை குறையும். அங்கீகாரம் அளிக்கப்படும் தொழிற்சங்கங்களுக்கு மத்திய அல்லது மாநில அளவில் குறிப்பிட்ட பங்களிப்புகள் ஒதுக்கப்படும்.

****