பி.எம்.இந்தியா
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.1,000 கோடி நிதியுடன் உருவாக்கப்பட்ட ‘தொழில் தொடங்குவோம்’ இயக்கத்திற்கான நிதியத்திற்கு நிதி (Fund of Funds of Start-ups – FFS) திட்டம் தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள கீழ்க்காணும் பரிந்துரைகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பின்னணி
தொழில் தொடங்குவோம் இயக்கத்திற்காக ஒட்டுமொத்தமாக ரூ.10,000 கோடியில் நிதிக்கு நிதியை உருவாக்கும் பரிந்துரைக்கு 22-06-2016-ல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதி, திட்ட செயலாக்கத்தின் முன்னேற்றம், கிடைக்கும் நிதி ஆகியவற்றின் அடிப்படையில், 14 மற்றும் 15-வது நிதி ஆணைய காலகட்டங்களில் அளிக்கப்படும். பல்வேறு வகையான தொடங்குவோம் திட்டங்களில் தொடக்க நிலை, வளரும் நிலை மற்றும் வளர்ச்சியடைந்த நிலைகளில் பங்குகள் மற்றும் பங்குகளுடன் இணைக்கப்பட்ட வழிகளில் முதலீடு செய்ய மாற்று முதலீட்டு நிதிக்கு (Alternative Investment Funds-AIFs) தொழில் தொடங்குவோம் இயக்கத்திற்கான நிதிக்கு நிதியிலிருந்து பங்களிப்பு செய்வது என்று முடிவுசெய்யப்பட்டது.
தொழில் தொடங்குவோம் இயக்கத்திற்கான நிதிக்கு நிதியை கையாளுதல் மற்றும் செயல்படுத்தும் பணிகளை இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி (SIDBI) மேற்கொள்ளும். இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) பதிவுசெய்யப்பட்ட மாற்று முதலீட்டு நிதிக்கு (AIF) தொடங்குவோம் பிரச்சாரத்துக்கான நிதிக்கு நிதியிலிருந்து நிதி வழங்கப்படும். மாற்று முதலீட்டு நிதியில் அதிகபட்சமாக 35 சதவீதம் வரை இந்த நிதி இருக்கலாம்.
22.06.2016-ல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நிதிக்கு நிதியில் உள்ள ஒட்டுமொத்த தொகை மற்றும் மாற்று முதலீட்டு நிதியில் தொடங்குவோம் பிரச்சாரத்துக்கான நிதிக்கு நிதி வைத்துள்ள முதலீடு என அனைத்து தொகையையும் தொடங்குவோம் திட்டத்திலேயே முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. பல்வேறு பங்குதாரர்களுடன் துறை ரீதியாக நடத்தப்பட்ட ஆலோசனையின்போது, மாற்று முதலீட்டு நிதியில் முதலீடு செய்துள்ளவர்கள், அந்த நிதியில் முதலீட்டு இடர்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில், வேறு நிதிக்கு பயன்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். மாற்று முதலீட்டு நிதியின் ஒட்டுமொத்த நிதியையும் தொடங்குவோம் திட்டத்திலேயே முதலீடு செய்துவிட்டால், மாற்று முதலீட்டு நிதி முதலீட்டாளர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு இடர்பாடுகள் ஏற்படும் என்று தெரிவித்தனர்.
மேலும், இந்தியாவில் தொடங்குவோம் திட்டத்துக்கு நிதியளிப்பு நடவடிக்கை நீண்டகாலம் பிடிக்கிறது என்று பங்குதாரர்கள் குறிப்பிட்டனர். அதாவது, இந்தியாவில் தொடங்குவோம் என்ற பிரச்சாரத்தில் தொடங்கி, மாற்று முதலீட்டு நிதியின் வாக்குறுதி அளிக்கப்படுகிறது. அதன்பிறகு, பகுதி பகுதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, கடைசி தவணை செலுத்துவதற்கு முன்னதாக, தொடங்குவோம் திட்டத்தின் விற்றுமுதல் ரூ.25 கோடியை தாண்டிவிடுகிறது. எனினும், அதன் வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நிதி தேவைப்படுகிறது. அதோடு, தொடங்குவோம் திட்டத்துக்கான நிதி, பல்வேறு கட்டங்களாக தேவைப்படுகிறது. அதாவது, தொடக்க நிலை, வளரும் நிலை, வளர்ந்த நிலை.
மாற்று முதலீட்டு நிதிக்கு ஒதுக்கீடு செய்தபிறகு, தாங்கள் செய்யும் பணிகளுக்கான நிவாரணம் கிடைப்பதற்கான வழிவகைகள் தற்போதைய வழிமுறைகளில் இல்லை என்று மத்திய அரசிடம் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி குறிப்பிட்டது.
மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில், மத்திய அமைச்சரவை இந்த முடிவுகளை எடுத்துள்ளது.
****