Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு பிரதமர் இரங்கல்


நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பிரபல நடிகை ஸ்ரீதேவியின் எதிர்பாராத மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவர் திரைப்பட துறையில் முன்னோடியாக திகழ்ந்தார். அவரது நீண்ட திரையுலக பயணம் பல்வேறு மறக்கமுடியாத பாத்திரங்களும் நிகழ்ச்சிகளையும் கொண்டிருந்தது. இந்த துயர தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

****