Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நல்ல எண்ணங்கள், செயல்கள், சொற்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் தொடர்ந்து நல்லவற்றையே பின்பற்றுவது ஒருவரது குணத்தையும் வாழ்க்கைப் பயணத்தையும் எவ்வாறு நல்லவிதமாக மாற்றுகிறுது என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இது தொடர்பான ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்.

ஒருவர் தனது எண்ணங்கள், செயல்கள், சொற்கள் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தும் விஷயங்களே, அவரது ஆளுமையை வடிவமைத்து அவரை அந்த திசையில் கொண்டு செல்வதாக அந்த ஸ்லோகம் கூறுகிறது. எனவே, ஒருவர் தனது எண்ணங்களிலும், உரையாடல்களிலும் எப்போதும் பயனுள்ள விஷயங்களுக்கு மட்டுமே இடம் கொடுக்க வேண்டும் என்று அந்த ஸ்லோகம் அறிவுறுத்துகிறது.

***

(Release ID: 2288695)

SS/PLM/ PS/SP