Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவீன நகரங்களை உருவாக்குவதற்காக, மத்திய நகர்புர வளர்ச்சித் துறை மற்றும் ப்ளூம்பெர்க் உதவி மையத்தின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நியூயார்க் நகரின், ப்ளூம்பெர்க் உதவி மையம் மற்றும் மத்திய நகர்புற வளர்ச்சித் துறை இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தின் மூலம், ப்ளூம்பெர்க் உதவி மையம், நவீன நகரங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ், நகரங்களை உருவாக்குவதற்கான இந்தியாவின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவுசார் பங்குதாரராக திகழும். 29 ஏப்ரல் 2015 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நவீன நகரங்களை உருவாக்கும் திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. 25 ஜூன் 2015 அன்று, பிரதமர், நவீன நகரங்கள் உருவாக்கும் திட்டத்துக்கான அறிக்கையையும், வழிகாட்டுதல்களையும் வெளியிட்டார்.

நவீன நகரங்கள் திட்டம், நகரங்களில் தரமான உட்கட்டுமானத்தை உருவாக்கவும், நகர வாழ்வை செம்மைப்படுத்தவும் உதவும். ப்ளும்பெர்க் உதவி மையம் மேயர்களையும், உள்ளூர் தலைவர்களையும், பயன்படுத்தி நவீன நகரங்கள் கட்டமைப்பதில் உள்ள சவால்களை எதிர்கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களின் புதிய முயற்சிகளை வளர்க்கும்.

அறிவுசார் பங்குதாரர் என்ற முறையில் ப்ளூம்பெர்க் உதவி மையம் மத்திய நகர்புர வளர்ச்சித் துறையின் நவீன நகரங்கள் திட்டத்துக்கு வடிவமைப்புகளை உருவாக்கவும், நவீன நகரங்களை மேலாண்மை செய்யவும் உதவும. இத்திட்டத்துக்கான அனைத்து செலவுகளையும் ப்ளூம்பெர்க் உதவி மையம் ஏற்றுக் கொள்வதால், மத்திய அரசுக்கு இதனால் நிதி செலவீடு ஏதும் கிடையாது.