Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு செல்லும் முன் பிரதமர் அளித்த செய்தி அறிக்கையின் தமிழாக்கம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு செல்லும் முன் பிரதமர் அளித்த செய்தி அறிக்கையின் தமிழாக்கம்


அனைவருக்கும் வணக்கம்,

இந்த வருடம் ஆகஸ்ட் 15ந் தேதி மிக முக்கியமானது. இந்த ஆண்டு நாம் 70-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். சுதந்திர தினம் விரைவில் வர விருப்பதால் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் முக்கியமானதாகும். சுதந்திர தினத்தன்று நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை நினைவு கூர்வோம்.

நமது இந்த 70 ஆண்டு பயணத்தில் இந்த நாடாளுமன்ற தொடர்மூலம் நாம் புதிய உயரத்தை எட்டுவோம். இதற்காக நாம் நல்ல பயனுள்ள தரமான விவாதங்களை நடத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவும் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். எனவே நம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய உயரத்தை எட்ட நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிய வேண்டும்.

நம் நாட்டின் வேகமான வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் இந்த கூட்டத்தொடரில் நல்ல முடிவுகளை எடுக்க முழு மனதோடு பாடுபடுவோம் என்று பல்வேறு கட்சி தலைவர்களும் கூட்டாகவோ தனியாகவோ கடந்த சில தினங்களில் கூறியுள்ளனர் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

நன்றி!