பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா எட்டிய 7.8% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை ஒரு மாபெரும் சாதனை என்று கூறியுள்ளார். எண்ணெய் விலை அதிகரிப்பு, விநியோகத் தடைகள், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவை இருந்தபோதிலும், இந்தச் சாதனை இந்திய மக்களின் கூட்டு வலிமையையும் மீட்சித் திறனையும் பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் 7.8% என்ற முன்மாதிரியான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஒரு மாபெரும் சாதனையாகும்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், எண்ணெய் விலை அதிகரிப்பு, விநியோகத் தடை தொடர்பான பிரச்சனைகள் ஆகியவை இருந்தபோதிலும், நமது மக்களின் ஒன்றுபட்ட சக்தியே நாடு இத்தகைய வளர்ச்சி அடைவதை உறுதி செய்துள்ளது.
அழிவு சிந்தனை கொண்ட கோட்பாட்டாளர்கள் தோற்றனர்.
இந்தியா மீண்டும் உறுதியுடன் மலர்ந்துள்ளது!”
***
(Release ID: 2305033)
SS/PLM/SH
India’s exemplary GDP growth of 7.8% during Q1 of FY 2026-27 is a herculean feat.
— Narendra Modi (@narendramodi) August 31, 2026
The collective strength of our people ensured India delivered such growth despite oil price shocks and supply chain issues in the midst of global uncertainties.
Doomsayers were doomed and India…