2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ஜே2 -52 கிலோ ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோகிலாவிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், தற்போது புதிய பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது, அவரது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியைக் காட்டுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்திலும் அவர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
“2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான ஜே2 -52 கிலோ ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோகிலாவிற்கு வாழ்த்துகள்! முந்தைய ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், இம்முறை புதிய பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது, அவரது அசாத்தியமான விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியைப் பறைசாற்றுகிறது. வரும் காலங்களிலும் அவர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்! – பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325314®=3&lang=1
***
AD/BR/SH
Congratulations to Kokila on winning the Silver Medal in the Women’s J2 -52kg Judo event at the Asian Para Games 2026! From Bronze at the previous Asian Para Games to Silver in a new category, her journey reflects remarkable perseverance, dedication and determination. Wishing her continued success in the years ahead: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 19, 2026