Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நானாஜி தேஷ்முக்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, நானாஜி தேஷ்முக்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளதோடு, உண்மையான மாற்றம் அடிமட்டத்திலிருந்தே தொடங்குகிறது என்பதை சிந்தனையாலும் செயலாலும் நிரூபித்த ஒரு சிறந்த தேசக் கட்டமைப்பு வாதியாக அவர் திகழ்ந்தார் என நினைவு கூர்ந்துள்ளார்.

நானாஜி தேஷ்முக் அரசியல் உறுதிப்பாட்டை ஆக்கப்பூர்வமான சமூகச் செயல்பாட்டுடன் இணைத்து, ஊரக வளர்ச்சிக்காகவும் சமூகப் பங்கேற்பிற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

வலுவான, தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நானாஜி தேஷ்முக்கின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் தேசம் அயராது பாடுபடும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நானாஜி தேஷ்முக்கின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். உண்மையான மாற்றம் அடிமட்டத்திலிருந்தே தொடங்குகிறது என்பதை சிந்தனையிலும் செயலிலும் நிரூபித்த ஒரு சிறந்த தேசக் கட்டமைப்புவாதியாக அவர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். அவரது வாழ்க்கையை, அரசியல் உறுதிப்பாட்டை ஆக்கப்பூர்வமான சமூகச் செயல்பாட்டுடன் இணைத்து, கிராமப்புற மேம்பாட்டிற்கும் சமூகப் பங்களிப்பிற்கும் தன்னை அர்ப்பணித்திருந்தார். வலிமையான, தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நாங்கள் அயராது உழைக்கிறோம்.”

****

(Release ID: 2321857)

TV/PLM/RJ