Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நானாஜி தேஷ்முக் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்


ராஷ்டிர சேவக் நானாஜி தேஷ்முக்-கின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர  மோடி அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளார். “தலைசிறந்த சமூக சேவகரும், தேசபக்தருமான நானாஜி தேஷ்முக்-கின் பிறந்தநாளில், அவருக்கு தலைவணங்குகிறேன். கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடியவர் அவர். தேச வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது, மாறாக எப்போதும் நினைவு கூறத்தக்கது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.