பி.எம்.இந்தியா
பாரதப் பிரதமர் மோடி, 24 செப்டம்பர் 2015 அன்று பாரதப் பிரமதர் மோடி, நியுயார்க் நகர் வந்தடைந்தார்.
தலைமை செயல் அதிகாரிகளுடனான நியூயார்க் நகரில் நடக்க உள்ள சந்திப்பின்போது, மோடி இந்தியாவில் முதலீடு செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து உரையாட உள்ளார்.
ஜே.பி. மோர்கன் மற்றும் ப்ளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்கள் உள்ளிட்ட நிதித்துறையிலிருந்து வரும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளிடம் மோடி வட்ட மேசை கூட்டம் நடத்த உள்ளார். டைம் வார இதழ் மற்றும் ஃபார்ச்சூன், தொழில் வளர்ச்சி மற்றும் தொழில் கொள்கை துறை நியூயார்க் நகரில் நடத்தும் கூட்டத்தில் மோடி நிதித் துறையிலிருந்து வருகை தரும் தலைமை செயல் அதிகாரிகாளாடு கலந்துரையாட உள்ளார். இந்தக் கூட்டத்தில் லாக்ஹீட் மார்ட்டின், ஃபோர்டு, ஐ.பி.எம்., பெப்சி, ஜெனரல் மோட்டார்ஸ், போயிங் மற்றும் மாஸ்டர் கார்டு ஆகிய நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை குறித்து, மோடி வட்டமேஜை சந்திப்பிலும் உரையாட உள்ளார்.
கயானா நாட்டின் ஜனாதிபதி டேவிட் க்ராங்கரோடு, மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.