பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் திரு. டேவிட் கேமரூனும் இன்று நடந்த இந்தியா இங்கிலாந்து நிர்வாக தலைவர்கள் மன்றத்தில் பங்கேற்றனர்.
இந்த மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கேமரூன், பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை பற்றியும் இந்தியாவை மாற்றியமைக்க அவர் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வரலாறு சிறப்பு வாய்ந்த உறவு பற்றி திரு. மோடி பேசினார். அப்போது, இது நாடுகளுக்கும் இடையே உள்ள கூட்டுறவிற்கு பொருளாதார உறவு முக்கிய பங்கு அளிப்பதாக கூறினார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம், உட்கட்டமைப்பு மேம்பாடு, பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு வாய்ப்பு, 2022 ஆம் ஆண்டிற்குள் 50 மில்லியன் வீடுகள், 175 கிகா வாட்டிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் முயற்சிகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவில் இங்கிலாந்து நிறுவனங்கள் செய்யும் முதலீடுகள் இரு நாட்டிற்கும் லாபம் தரும் என்று பிரதமர் கூறினார்.
இந்தியாவின் தற்போதைய காலம் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகளின் காலமாக கருதப்படுகிறது.