பி.எம்.இந்தியா
பீகார் முன்னாள் முதலமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு நிதிஷ் குமார் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக நீண்டகாலம் பிரதமராக பொறுப்பு வகிக்கும் திரு நரேந்திர மோடிக்கு இக்கட்டுரையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலையின் போது ஏற்பட்ட இடர்பாடுகளை நினைவு கூர்ந்துள்ள இக்கட்டுரை, அரசின் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டு, நிர்வாக நடவடிக்கைகள் மக்களுக்கு பலன்களாக அமைவதை உறுதி செய்வதற்கான பிரதமர் திரு மோடியின் தலைமைத்துவம் முக்கிய அம்சமாக திகழ்கிறது என்று குறிப்பிடுகிறது.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக நீண்டகாலம் பிரதமராக பொறுப்பு வகிக்கும் திரு நரேந்திர மோடிக்கு பீகார் முன்னாள் முதலமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு நிதிஷ் குமார் இக்கட்டுரையில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவசர நிலையின் போது ஏற்பட்ட இடர்பாடுகளை அவர் நினைவு கூர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டு, நிர்வாக நடவடிக்கைகள் மக்களுக்கு பலன்களாக அமைவதை உறுதி செய்வதற்கான பிரதமர் திரு மோடியின் தலைமைத்துவம் முக்கிய அம்சமாக திகழ்கிறது என்று கூறியுள்ளார்.”
*
TV/IR/RJ/SE
This article by former CM of Bihar and Rajya Sabha MP Shri @NitishKumar lauds PM @narendramodi on becoming India’s longest serving democratically elected PM in consecutive terms. He recalls the struggles during the Emergency, lists many achievements of the NDA government and… pic.twitter.com/Fvi31Wwa92
— PMO India (@PMOIndia) June 10, 2026