Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நுகர்வோர் குறைகளை இன்னும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்-பிரகதி கூட்டம் மூலம் பிரதமர் மோடி வேண்டுகோள்

நுகர்வோர் குறைகளை இன்னும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்-பிரகதி கூட்டம் மூலம் பிரதமர் மோடி வேண்டுகோள்


சிறப்பான நிர்வாகம் மற்றும் நேரம்சார்ந்த திட்ட அமலாக்கல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில உயர் அதிகாரிகளுடன் பிரகதி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

முதலில் நுகர்வோர் குறைகளை தீர்ப்பது மற்றும் கையாளும் முறைகள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்வது, டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பாக மின்னணு முறையில் நடக்கும் (ஆன்லைன் புக்கிங்) வர்த்தகங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்திருப்பது குறித்து சம்மந்தப் பட்ட அதிகாரிகளிடம் பிரதமர் ஆலோசனை நடத்தினார். என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உதவி தொலைபேசி மையத்தை அதிகரித்தல் மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்ட பிரதமர் இந்த புகார்களை மிகவும் தீவிரமாக செயல்பட்டு தீர்க்கவும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் விரிவான ஆய்வுகளை செய்யவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

பிரச்சினைகளுக்கு பொறுப்பு யார் என்பதை முடிவு செய்யவும், அதற்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பிரதமர், 10 தினங்களுக்குள் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா,குஜராத், பீகார்,ஒடிசா, மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, ரயில்வே, மின்சாரம், நிலக்கரி மற்றும் சுரங்கத் திட்டங்களின் நிலை குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.

நாடுமுழுவதும் அமைக்கப்படும் சோலார் பம்ப் நிர்மாணிக்கும் திட்டம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். ஏற்கெனவே 208 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பம்ப்பு கள் அமைக்கப்பட்டுவிட்டது என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.

இதுதவிர ஜார்க்கண்ட், தெலுங்கானா, பஞ்சாப், சத்திஷ்கர், குஜராத், மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்தும் பிரதமர் மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது சோலார் பம்ப் திட்டம் மூலம் நக்சலைட்டுகள் பாதிப்புள்ள பகுதி மக்களுக்கு சுத்தமான குடீநீர் வினியோகிக்க முடிகிறது என்றும் குறிப்பாக சத்திஷ்கர் மாநிலத்தில் தெற்கு பஸ்தர் பகுதியில் இதன் பயன்பாடு சிறப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

இந்த ஆய்வு கூட்டத்தின் போது, வெள்ளத் தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்தும் அத்தகைய பாதிப்புக்கு இலக்காகும் மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த பணிகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். குறிப்பாக வெள்ளத் தடுப்பு ஒத்திகை வெள்ள நிவாரணபணிகள் நிர்வாகம் குறித்தும் ஆய்வு செய்த பிரதமர், நீர் சேமிப்பிற்கான முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.