Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நெபெட், பி.இ.சி., எஸ்.டி.சி. மற்றும் எம்எம்டிசி ஆகிய நிறுவனங்கள் பருப்பு வகைகளை இறக்குமதி செய்து உள்நாட்டில் விற்பனை செய்தபோது ஏற்பட்ட 15 சதவீத இழப்பை அரசு அளித்துள்ளது.


தேசிய விவசாய கூட்டுறவு விற்பனைக்கழகம், திட்டம் சாதனங்களுக்கான நிறுவனம், அரசு வர்த்தகக்கழகம், உலோகம் மற்றும் தாதுப் பொருட்கள் வர்த்தக நிறுவனம் ஆகியவை 2006-2011 வரையிலான ஆண்டுகளில் இறக்குமதி செய்த பருப்பு வகைகளை உள்நாட்டில் விற்றதன் மூலம் ஏற்பட்ட 113.40 கோடி ரூபாய் இழப்பை மத்திய அரசு திரும்ப அளிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உணவு மற்றும் நுகர்வோர் விவகாரம், மற்றும் பொது விநியோகம் குறித்த அமைச்சரவை இதற்கான பரிந்துரையை ஏற்கனவே அனுப்பியிருந்தது.

நுகர்வோருக்கு சில்லறை விலையில் பருப்பு வகைகளை விநியோகிக்க 5000 டன் துவரம் பருப்பு மற்றும் 5000 டன் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை உலோகம் மற்றும் தாதுப் பொருட்களுக்கான நிறுவனம் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பருப்பு வகைகளின் முதல் பகுதி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதிக்கு மும்பையை வந்தடையும்.

அத்தியாவசியப் பண்டங்களின் குறிப்பாக பருப்பு வகைகள் மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பருப்பு வகைகளை குறிப்பிட்ட அளவு தான் வணிகர்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லா வகையான பருப்பு வகைகளையும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. காபூலி சனா, ஆர்கானிக் பருப்பு வகைகள் போன்றவற்றுக்கு 10000 மெட்ரிக் டன் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படும் போது அதற்கு தீர்வை கிடையாது.

••••••