Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நெர்தர்லாந்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை (ஜூன் 27, 2017)

நெர்தர்லாந்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை (ஜூன் 27, 2017)

நெர்தர்லாந்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை (ஜூன் 27, 2017)


மேதகு பிரதமர் மார்க் ருட்டே அவர்களே,

கடந்த 2015ம் ஆண்டு ஜூனில் இந்தியாவில் உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது நான் பேசும்போது, வழக்கமாக இந்தியாவில் ஜூன் மாதம் இந்தியாவில் மிக வெப்பமாக இருக்கும் என்றும், இருந்தபோதும், நீங்கள் அந்த மாதத்தை தேர்ந்தெடுத்து இந்தியாவுக்கு வந்ததன் மூலம் நமது பரஸ்பர உறவில் உங்களது ஈடுபாட்டை வெளிப்படுத்தியது என்றும் கூறினேன்.

தற்போது சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து, அதே ஜூன் மாதத்தில் நான் நெதர்லாந்து வந்துள்ளேன். ஆனால், டெல்லிக்கும், தி ஹேக்குக்கும் இடையே வெப்பநிலையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இது இரவும் பகலும் ஆக உள்ளது. இங்குள்ள வெப்பநிலையை பார்க்கும்போது மிக இதமாக உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு மட்டுமின்றி, என் குழுவினருக்கும் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அன்பான வரவேற்பின் மூலம் இந்திய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

மேன்மைமிக்கவரே, என்னுடைய நெதர்லாந்து பயணம்மிக குறுகிய காலத்தில் முடிவு செய்யப்பட்டதாகும். மேலும், இன்னமும் கூட இந்த பயணம் எந்த வகையில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது என்பதை கூட நான் பதிவு செய்யவில்லை. ஆனால், மிக குறுகியக்காலத்தில் தெரிவிக்கப்பட்ட இந்த பயணத்தை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, இந்த குறுகியக் காலத்துக்குள்ளேயே சிறப்பான செயல்திட்டங்களை ஏற்பாடு செய்தது மட்டுமின்றி, அவை சிறப்பான முடிவுகளை ஏற்படுத்தும் வகையில் செய்திருந்தது மிக சிறப்பானது.

மேன்மைமிக்கவரே, நீங்கள் கூறியது மிக சரியானது. இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையிலான உறவானது, நூற்றாண்டுகள் பழமையானது மட்டுமின்றி, நமது இரு நாடுகளின் நோக்கம், இந்த உறவை மிக ஆழமாக, நெருக்கமாக மாற்ற வேண்டும் என்பதுதான். மேன்மைமிக்கவரே நீங்கள் கூறியபோல், இந்த ஆண்டு இந்தியா, நெதர்லாந்து இடையே தூதரக உறவுகள் தொடங்கியதன் 70ம் ஆண்டை குறிப்பதாகும். எனவே நம்மடைய பரஸ்பர உறவில் மேலும் கவனம் செலுத்த வேண்டியது இயற்கையான அம்சம் ஆகும்.

இன்றைய உலகம் ஒன்றை ஒன்று சார்ந்தும், ஒன்றை ஒன்று இணைந்தும் உள்ளன. எனவே, நாம் நம்முடைய பரஸ்பர உறவை மட்டுமின்றி, சர்வதேச அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விவாதிக்க வேண்டியுள்ளது.

சர்வதேச விவகாரங்களில் நமது இரு நாடுகள் இடையே பல்வேறு ஒத்த கருத்துகள் உள்ளன. நெதர்லாந்து உதவியுடன் இந்தியா கடந்த ஆண்டு எம்.டி.சி.ஆர்.ரில் உறுப்பினர் பதவியை பெற்றது. இதற்காக எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தியாவில் பரஸ்பர முதலீடு விவகாரத்தை பொருத்தவரையில், நெதர்லாந்து வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 5வது மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. உண்மையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இது மூன்றாவது மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டு ஆதாரமாக மாறியுள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சியில், எங்களுடைய வளர்ச்சிக்கான முன்னுரிமையில், நெதர்லாந்து எங்களுடைய இயற்கையான கூட்டாளி. இந்த உண்மையை திரும்பச் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன்.

டச் நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களை சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. அவர்கள் இந்தியாவின் மீது நேர்மறையான பார்வையை கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.  அவர்களின் நோக்கங்களை பகிர்ந்து கொள்ள நான் ஆர்வமாக உள்ளேன்.

நெதர்லாந்தில் வசிக்கும் இந்திய மக்களை சந்தித்து பேசும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது. இங்கு வசிக்கும் இந்திய மக்கள், இரு நாடுகளை இணைக்கும் பாலமாக விளங்குகின்றனர். மக்கள் & மக்கள் இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய நமது கடமை.

மாட்சிமைப் பொருந்திய மன்னர் மற்றும் ராணியை சந்திக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அவர்களுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே மற்றும் அரசு, மக்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியை மீண்டும் ஒரு முறை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி.